டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், ட்விட்டர் சி.இ.ஓ, உலக பணக்காரருமான எலான் மஸ்க் X.AI என்ற பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக ஏ.ஐ உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சாட்ஜி.பி.டி என்ற ஏ.ஐ உலகம் முழுவதும் பேசு பொருளானது. மனிதனின் அனைத்து வேலைகளையும் இந்த ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு செய்யும்.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தி பைனான்சியல் டைம்ஸின் அறிக்கைகளின்படி, கோடீஸ்வர தொழில்முனைவோர், X.AI கார்ப் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நெவாடாவில் தொடங்கப்பட உள்ளது எனவும், மஸ்க் அந்த நிறுவனத்தின் ஒரே இயக்குநர் என்றும் ஜாரெட் பிர்ச்சால் செயலாளராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏ.ஐ வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்த மஸ்க், தற்போது புதிய ஏ.ஐ உருவாக்க, திட்டத்தை வழிநடத்த விஞ்ஞானி இகோர் பாபுஷ்கின் உட்பட இரண்டு முன்னாள் டீப் மைண்ட் ஆராய்ச்சியாளர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஏ.ஐ தரவுகளை மேம்படுத்த 10,000 கிராபிக்ஸ் ப்ராஸசிங் யூனிட்டுகளை (GPU) மஸ்க் வாங்கியதாக கூறப்படுகிறது. அதோடு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலீட்டாளர்ளையும் தனது புதிய முயற்சியில் பணம் செலுத்த மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டைம்ஸ் இதழில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil