உலகப் பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனர், X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தற்போது மற்றொரு அதிரடியை நடத்த உள்ளார். கூகுளின் மிகவும் பிரபலமான ஜிமெயிலுக்கு மாற்றாக Xமெயில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க் தனது X தளத்தை விரிவுபடுத்தும் பார்வையில் Xமெயில் (Xmail) அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
டெய்லிமெயிலில் ஒரு அறிக்கையின்படி, எக்ஸ் பிளாட்ஃபார்மில் ஒரு Exchange நிகழ்ச்சியில் , எக்ஸ்மெயில் என்ற தயாரிப்பு வருவதை மஸ்க் வெளிப்படுத்தினார். இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை, அது எப்போது கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மெயில் X தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
X-ல் பணியாற்றும் என்ஜினியர் நேட் தனது X பக்கத்தில், "நாங்கள் எப்போது Xmail -ஐ உருவாக்குவோம்" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மஸ்க், "அது வரும்" என்று கூறினார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு ட்ரெண்ட் ஆனது. பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் முன்னதாக கடந்தாண்டு ட்விட்டர் தளத்தை வாங்கினார். இதன்பின் அதிரடி மாற்றங்கள் நடைபெற்றது. ட்விட்டரின் சி.இ.ஓ, உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன் பின் ட்விட்டர் பெயரையும் X என மாற்றினார். X தளத்தை அனைத்திற்குமான தளமாக மாற்ற மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறது. X an ‘everything app’ என்ற பெயரில் மாற்ற முயல்கிறார். அதன் ஒரு பகுதியாக Xmail உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“