2015-ல் ஓபன் ஏ.ஐ-ன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மஸ்க் தற்போது அந்நிறுவனத்தின் மீது கடும் விமர்சனம் செய்து வருகிறார். ஓபன் ஏ.ஐ லாபம் ஈட்டுவதற்காக அதன் அசல் பணியை கைவிட்டதாக அவர் தொடர்ந்து பேசி வருகிறார். X உரிமையாளர் மஸ்க், சமீபத்தில் OpenAI-க்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். இப்போது, மஸ்க் தனது சொந்த AI கருவியான GrokAI-ஐ இந்த வாரம் ஓப்பன் சோர்ஸ் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
GrokAI- ஓப்பன் சோர்ஸ்; அப்படி என்றால் என்ன?
GrokAI ஓப்பன் சோர்ஸ் செய்யப்பட்டால் அதன் சோர்ஸ் கோட் பொதுமக்களுக்குக் கிடைக்கும் மற்றும் டெவலப்பர்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓப்பன் சோர்சிங் என்பது அடிப்படையில் அதன் சோர்ஸ் கோட் மாற்றங்கள் மற்றும் மறுவிநியோகத்திற்காக வழங்குவதாகும். இதுகுறித்து மஸ்க் தனது X பக்கத்தில் கூறுகையில், இந்த வாரம் X ஏ.ஐ-ன் க்ரோக் ஏ.ஐ ஓப்பன் சோர்ஸ் செய்யப்படுவதாக எலான் மஸ்க் கூறினார். மேலும் ஓபன் ஏ.ஐ ஒரு பொய் என்றும் விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“