Advertisment

அடுத்தடுத்த அதிரடி; யூடியூப்க்கு போட்டியாக பிரத்யேக டி.வி செயலியை களமிறக்கும் எலான் மஸ்க்

அமேசான் ஃபயர் ஓ.எஸ் மற்றும் சாம்சங் டைசன் ஓ.எஸ் ஆகியவற்றில் துவக்கப்படும் இந்த ஆப், யூடியூப் போன்ற அம்சங்களையும், பழக்கமான இடைமுகத்தையும் இந்த செயலி வழங்கும்.

author-image
WebDesk
New Update
X app.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபார்ம் 'X' (எக்ஸ்) யூடியூப்க்குப் போட்டியாக  long-form videos பார்ப்பதற்கான செயலியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் முதற்கட்டமாக நிறுவனம் இப்போது ஸ்மார்ட் டி.விகளுக்காக ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஆரம்பத்தில், இந்த பயன்பாடு Fire OS (Amazon) மற்றும் Tizen OS (Samsung) ஆகியவற்றில் இயங்கும் தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும். மேலும் நிறுவனம் Google TV OS மற்றும் Apple tvOS போன்ற பிற பிரபலமான தளங்களுக்கு விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளது. பிரத்யேக டி.வி செயலி குறித்து 'X' தளத்தில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் எலான் மஸ்க் இதை உறுதி செய்தார்.

யூடியூப் தற்போது உலகின் மிகவும் பிரபலமான இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். இதற்கு எலான் மஸ்க் X தளம் மூலம் ஒரு மாற்று தளத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்.  எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரின் பெயரை X என மாற்றினார். அதோடு எலான் மஸ்க் X தளத்தை அனைத்து வசதியையும் உள்ளடக்கிய செயலியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். X- “ an everything app” என்ற பெயரில் மாற்ற முயற்சி செய்து வருகிறது. 

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக X தளத்தில் ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஜிமெயிலுக்கு மாற்றாக Xமெயில், பேமெண்ட் வசதிகள், தற்போது யூடியூப்க்குப் மாற்றாக X டி.வி செயலி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

ElonMusk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment