எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.ஏ.ஏ) நிறுவனம் உலகின் மிக பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பை தரையிறக்க உத்தரவிட்டது.
ஏப்ரலில் ஸ்டார்ஷிப் மேற்கொண்ட முதல் சோதனையின் போது அது வானில் வெடித்துச் சிதறிய பின் எஃப்.ஏ.ஏ உத்தரவிட்டுள்ளது. பல கட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை ஸ்டார்ஷிப் ஏவுதல் செய்யக் கூடாது என எஃப்.ஏ.ஏ உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரலில் ராக்கெட் வெடித்தது குறித்து எஃப்.ஏ.ஏ மேற்கொண்ட விரிவான விசாரணை கடந்த வெள்ளிக் கிழமை முடிவடைந்ததாக அறிவித்தது. அதன் அறிக்கையில் விபத்துக்கு வழிவகுத்த பல காரணங்களை மேற்கோள் காட்டியது. அதன்படி 63 சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து திருத்தங்களையும் செய்த பிறகு, நிறுவனம் மற்றொரு ஏவுதலுக்கு முயற்சிக்கும் முன் எஃப்.ஏ.ஏ-யிடம் இருந்து உரிமம் பெற்று அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கசிவுகள் மற்றும் தீ விபத்துகளைத் தடுக்க வாகனத்தின் மறுவடிவமைப்பு, அதை வலிமையாக்க ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தின் மறுவடிவமைப்பு, வடிவமைப்பு செயல்பாட்டில் புதிய கூடுதல் மதிப்புரைகள் மற்றும் தன்னியக்க விமானப் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட முக்கியமான அமைப்புகளின் கூடுதல் பகுப்பாய்வு மற்றும் சோதனை ஆகியவை இந்த திருத்த நடவடிக்கைகளில் அடங்கும்.
முன்னதாக எலான் மஸ்க் X தளத்தில், ஸ்டார்ஷிப் ஏவுதலுக்கு தயாராக உள்ளது, எஃப்.ஏ.ஏ ஒப்புதல் நிலுவையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில், எஃப்.ஏ.ஏ, வெள்ளிக் கிழமை ராக்கெட்டை ஏவுதளத்தில் இருந்து தரையிறக்க உத்தரவிட்டது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“