பிரேசிலில் X அதன் சட்டப்பூர்வ பிரச்சனைகளை எதிர்கொண்ட பிறகு, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் மைக்ரோ பிளாக்கிங் தளத்தை ஆதரித்தார். இதையடுத்து பிரேசிலின் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம் மீண்டும் இயங்க அனுமதித்தது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு X இணங்காததால் உச்ச நீதிமன்றம் பிரேசிலில் X தளத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து பிரேசிலில் X சேவைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக 40 நாட்கள் தடைக்குப் பின் இப்போது மீண்டும் சேவையை தொடங்க உள்ளது.
எலான் மஸ்க்கின் X நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக அறிவித்த நிலையல் சேவை தொடங்கப்படுகிறது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் X தொடர்பான வழக்கில் எலான் மஸ்க்- உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோர் இடையே காரசார விவாதம் நடந்தது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக X அறிவித்த நிலையில் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் அதன் சேவை மீண்டும் தொடங்குகிறது. பிரேசிலில் X தளத்தை 20 முதல் 40 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“