/tamil-ie/media/media_files/uploads/2023/03/epf.jpg)
பிறப்பு சான்றாக (DOB) ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டது.
ஆதார் சட்டம் 2016-ன் கீழ் தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும் போது பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலில் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, EPFO கணக்கில் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்த முடியாது.
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பி.எப் (Provident fund) கணக்கு தொடங்கப்படும். நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில் ,குறிப்பிட்ட தொகை நமது பி.எப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது பி.எப் கணக்கில் சேரும்.
இ.பி.எப்.ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பி.எப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த பி.எப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.
தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த பிஎப் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும்.
இந்த நிலையில்தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. அதன்படி இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்க கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குதல் எனப் பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படும். இனிவே இனி உங்களுடைய பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.