கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக், ஒகினாவா ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், தற்போது சிவப்பு நிற ப்யூர் EV ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்த பைக் Pure EPluto 7G ஆகும். சென்னையில் மிகவும் பரபரப்பான சாலையின் ஓரத்தில் பைக்கில் தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமாக காட்சியளிப்தை காணமுடிகிறது. கடந்த சில நாள்களில், இ - ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் நான்காவது சம்பவம் ஆகும்.
Pure EV scooter on fire
ETAuto பத்திரிக்கையாளர் சுமந்த் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சிவப்பு நிற ஸ்கூட்டரில் தீப்பிடித்து புகை வந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது.
Another one...Its spreading like a wild #Fire .
After #Ola & #okinawa #electric scooter from #PureEV catches fire in Chennai.
Thats the 4th incident in 4 days..
The heat is on.#ElectricVehicles #OLAFIRE #lithiumhttps://t.co/pFJFb7uKD7 pic.twitter.com/jJqWA48CNf— Sumant Banerji (@sumantbanerji) March 29, 2022
இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட Pure EV நிறுவனம், " ஸ்கூட்டர் தீப்பிடித்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். சேதமடைந்த வாகனம் கிடைத்தவுடன் அதில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டிருந்தது. கடந்தாண்டு அக்டோபர் மாதமும், Pure EV ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
Ola Electric S1 Pro
மார்ச் 27 அன்று, புனேவின் லோஹேகான் பகுதியில் போர்வால் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டார்க் புளூ நிற ஓலா எலட்ரிக் S1 ப்ரோ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான பவிஷ் அகர்வால். வெளியிட்ட ட்வீட்டில், எங்கள் ஸ்கூட்டரில் ஒன்று புனேவில் தீப்பிடித்ததை அறிவோம். அதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் தான் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு நாளில் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என்றார்.
Okinawa electric scooters
மார்ச் 25 அன்று, தமிழ்நாட்டில் Okinawa எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு இரவு முழுவதும் வீட்டிற்குள் நிறுத்தி சார்ஜ் போட்டதில், ஸ்கூட்டர் தீப்பிடித்த விபத்தில் 45 வயதான நபரும், அவரது மகளும் உயிரிழந்தனர். இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வாகனத்தை சார்ஜ் செய்வதில் அலட்சியமாக இருந்ததால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிதத்து. முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
After Chennai, now Okinawa Electric Scooter caught on fire at Manapparai, Trichy. No casualties.#ElectricVehicles #electricbike #motowagon pic.twitter.com/OlgKeIKzj4
— MotoWagon (@motowagon360) March 28, 2022
மார்ச் 28 அன்று தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட வாகன ஊடகமான MotoWagon வெளியிட்ட ட்வீட்டில்ஸ பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட சிவப்பு நிற ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை காண முடிந்தது. ஸ்கூட்டரில் தீப்பிடிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மோட்டோவாகனின் கூற்றுப்படி, தீப்பிடித்தது Okinawa எலக்டிரிக் ஸ்கூட்டர் ஆகும். இச்சம்பவம் திருச்சியில் மணப்பாறை பகுதியில் நடந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக அந்நிறுவனம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
விசாரணைக்கு அரசு உச்சரவு
தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து, அரசு விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்படி, ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை (சிஎஃப்இஇஎஸ்) அமைச்சகம் அணுகியது. இந்த மையம், ஸ்கூட்டரில் ஏதேனும் கட்டமைப்பு குறைபாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் என தெரிகிறது.
இந்த ஸ்கூட்டர்கள் தீப்பிடித்ததற்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது போல், இந்த தீ விபத்துகளுக்கு , லித்தியம்-அயன் பேட்டரியின் தெர்மல் ரன்வே காரணமாக இருக்கலாம் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.