scorecardresearch

Express Basics: கூகுள் முகப்பு பக்கத்தில் இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.. அட இது தெரியாம போச்சே!

கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள Search bar widget-யை நம்முடைய தேவைக்கு ஏற்ப அதன் வடிவம், நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

Express Basics: கூகுள் முகப்பு பக்கத்தில் இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.. அட இது தெரியாம போச்சே!

ஸ்மார்ட்போன்கள் நம்முடைய வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. அனைத்து தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமாக கூகுள் பயன்படுத்தப்படுகிறது. சிறு தகவல்களை கூட கூகுளில் தான் பெறுகிறோம். கூகுள் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

நம்முடைய ஸ்மார்ட்போன்களை விருப்பத்திற்கு ஏற்ப ஐகான், wallpapers,keyboar, font என மாற்றி பயன்படுத்துகிறோம். அந்தவகையில் கூகுளிலும் நம்முடைய தேவைக்கு ஏற்ப சில அம்சங்களை மாற்றி பயன்படுத்தலாம். கூகுளின் Search bar widget-இன் வடிவம், நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

பெரும்பாலும் வெள்ளை நிறம், ஓவல் வடிவத்தில் கூகுள் Search bar இருக்கும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் Light Mode இல் இருக்கும் போது Search bar வெள்ளை நிறத்தில் இருக்கும். Dark Mode இல் இருக்கும் போது Search bar கிரே (Grey) நிறத்தில் இருக்கும். ஆனால் இதை உங்கள் விரும்பத்திற்கு ஏற்ப (customise) செய்துகொள்ளலாம். வேறு நிறம், வடிவத்திலும் மாற்றிக் கொள்ளலாம். அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

கூகுள் Search bar widget எப்படி மாற்றுவது?

முதலில் கூகுள் ஆப் ஓபன் செய்து, செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும். அங்கு Search Widget ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும், இல்லையென்றால் செட்டிங்ஸ் மெனுவில் டைப் செய்து தேடவும்.

இப்போது 2 ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். Doodles on the Search widget மற்றொன்று நீங்கள்
customise செய்து கொள்ளும்படி ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதை கிளிக் செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப கூகுள் லோகோ (logo), வடிவம், நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். இதை செய்த பின் வலப்புறத்தில் உள்ள Save button கொடுக்க வேண்டும். அவ்வளவுதான், இப்போது உங்கள் கூகுள் முகப்பு பக்கம் மாறி விடும். புதிதாக ஆப் எதுவும் டவுன்லோடு செய்யாமல் Search widget இப்படி மாற்றிக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Expressbasics how to customise the google search widget on android

Best of Express