Advertisment

புது அப்டேட்... ஆண்ட்ராய்டு டூ ஐபோன் வாட்ஸ்அப் சாட் மாற்றலாம்!... எப்படி?

வாட்ஸ்அப் புது அப்டேட்டில் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு வாட்ஸ்அப் சாட் தகவல்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Jul 30, 2022 12:51 IST
புது அப்டேட்... ஆண்ட்ராய்டு டூ ஐபோன் வாட்ஸ்அப் சாட் மாற்றலாம்!... எப்படி?

வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பயனர்களை ஈர்த்துள்ளது. காரணம், இது மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ஒன்றாக (user friendly) உள்ளது. தகவல்களை எளிய முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும்படியாக உள்ளது. அதனால், இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

Advertisment

இந்தியாவில் உள்ளவர்களும், வெளிநாட்டில் உள்ளவர்களும் எளிதில் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசமுடிகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை ஈர்க்க பல்வேறு வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி மகிழ்ச்சிபடுத்துகிறது.

அந்தவகையில், தற்போது புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு வாட்ஸ்அப் சாட் தகவல்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐபோனுக்கு மாறினால் வாட்ஸ்அப் தகவல்களை மாற்றமுடியாது. தற்போது புது அப்டேட்டில் மாற்றிக் கொள்ளும்படி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் எளிதாக மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று எளிய முறையில் ஆண்ட்ராய்டு டூ ஐபோன் வாட்ஸ்அப் சாட் தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

Step 1: ஐபோன் அப்டேட் செய்ய வேண்டும்

தகவல்களை மாற்றுவதற்கு முன்னதாக உங்கள் ஐபோனை சமீபத்திய சாப்ட்வேர் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். iOS 15.5- க்கும் பழமையான வெஷனில் வசதியை பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டையும் வை-பையில் கனெக்ட் செய்ய வேண்டும்.

Step 2: ஆண்ட்ராய்டு போனில் ‘Move to iOS’ செயலி டவுன்லோட் செய்ய வேண்டும்

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘Move to iOS’ செயலி ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்ய வேண்டும். இதன் மூலம் தகவல்களை எளிதில் மாற்றலாம்.

Step 3: ஆண்ட்ராய்டு டூ ஐபோன்

ஆண்ட்ராய்டு போனில் ‘Move to iOS’ செயலிக்கு சென்று சில தகவல்களை கொடுக்கவும். code எண் பதிவு செய்யும்படி கேட்கும். code எண் ஐபோனுக்கு அனுப்பபடும். ஐபோனில் iOS Setup Assistant’s பக்கத்தில் ‘Move Data from Android’ஆப்ஷன் கொடுத்தால் எண் காண்ப்பிக்கப்படும். ஆண்ட்ராய்டில் எண்ணை குறிப்பிட்டு, அதில் வரும் தகவல்களை கொடுக்கவும். பின்பு, Transfer Data screen இல் ‘WhatsApp’ செலக்ட் செய்ய வேண்டும்.

இப்போது, ஆண்ட்ராய்டு போனில் ‘Start’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். தகவல்கள் பேக்அப் எடுக்கப்படும். பேக்அப் நிறைவடைந்தவுடன் தானாக அந்த செயலில் இருந்து வெளிவந்துவிடும்.

அடுத்து , திரையில் ‘Next’ என வரும், அது கொடுத்து மீண்டும்‘Move to iOS’சென்று ‘Continue’ கொடுத்தால், வாட்ஸ்அப் சாட் தகவல்கள் ஆண்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கு மாற்றப்படும். இப்போது, ஐபோனில் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்ய வேண்டும். பழைய ஆண்ட்ராய்டு போன் நம்பர் கொடுத்து லாகின் செய்ய வேண்டும். ஐபோனில் பழைய ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் சாட் தகவல்களை இனி இங்கு பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Whatsapp Update #Android #Iphone #Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment