scorecardresearch

கூகுள் பேயில் உங்கள் ஃபோன் நம்பரை UPIஐடியாக செட் செய்யலாம்.. எப்படி?

கூகுள் பே யூபிஐ-ஐடியை மற்றவர்களுக்கு எளிதாக பகிர உங்கள் ஃபோன் நம்பரை யூபிஐ-ஐடியை மாற்றி செட் செய்து கொள்ளலாம். அது பற்றி இங்கு காண்போம்.

கூகுள் பேயில் உங்கள் ஃபோன் நம்பரை UPIஐடியாக செட் செய்யலாம்.. எப்படி?

இன்றைய நவீன காலச்சூழலில் எல்லாம் ஆன்லைன் மையமாகி விட்டது. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அனைத்தும் வீட்டிற்கு வந்து சேர்ந்து விடும். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பேமெண்ட் முறை என எல்லாம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. கூகுள் பே, ஃபோன் பே, பே.டி.எம் என பணப்பரிவர்த்தனை செயலிகள் வந்து விட்டன. UPIஐடி மூலம் எந்த பேங்க்-ஆக இருந்தாலும் எளிதாக பணம் அனுப்ப முடிகிறது.

அந்த வகையில் கூகுள் பேயில் ஃபோன் நம்பரை UPIஐடியாக செட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அது குறித்துப் பார்க்கலாம். கூகுள் பேயில் உங்கள் மெயில் ஐடி, பெயர் என ஏதாவது ஐடியாக கொடுக்கப்பட்டிருக்கும் அதை ஃபோன் நம்பராக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு,

1.கூகுள் பேயில் பேங்க் அக்கவுண்ட் பக்கத்திற்கு செல்லவும்

கூகுள் பே செயலிக்கு சென்று, பேங்க் அக்கவுண்ட் பகுதிக்கு செல்ல வேண்டும். அதற்கு வலப்புறத்தில் உள்ள profile icon யை கிளிக் செய்ய வேண்டும். ‘Bank Account’ ஆப்ஷனுக்கு சென்று எந்த பேங்க் UPIஐடியை மாற்ற வேண்டுமோ அதை செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.

2. ஃபோன் நம்பரை UPIஐடியாக செட் செய்யுங்கள்

பேங்க் செலக்ட் செய்ததற்கு பிறகு, ‘Manage UPI numbers’ கொடுத்து, ‘Manage UPI IDs’ ஆப்ஷன் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

3.பேங்க் அனுமதிக்க வேண்டும்

‘Manage UPI IDs’ பக்கத்திற்கு சென்ற பின், உங்கள் ஃபோன் நம்பரை UPIஐடியாக பதிவிட்டுங்கள். பேங்க் பிராசஸ் நடைபெறும், சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

உங்கள் பேங்க்கிடமிருந்து அனுமதி அளிக்கப்பட்ட உடன், ஃபோன் நம்பர் கூகுள் பே UPIஐடியாக மாற்றப்பட்டு விடும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Expressbasics how to set your phone number as upi id on google pay