ExpressBasics: இது வாட்ஸ்அப் சேர் அல்ல, கூகுள் மேப்ஸுடன் லொகேஷன் சேர்..எப்படி செய்வது?

வாட்ஸ்அப் லொகேஷன் சேர் அல்லாமல், பிரத்யேகமாக கூகுள் மேப்ஸுடன் லொகேஷன் சேர் செய்தால் கூடுதல் வசதிகள் பெற முடியும். அவை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ்அப் லொகேஷன் சேர் அல்லாமல், பிரத்யேகமாக கூகுள் மேப்ஸுடன் லொகேஷன் சேர் செய்தால் கூடுதல் வசதிகள் பெற முடியும். அவை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
ExpressBasics: இது வாட்ஸ்அப் சேர் அல்ல, கூகுள் மேப்ஸுடன் லொகேஷன் சேர்..எப்படி செய்வது?

நவீன காலத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிது. எல்லாம் ஆன்லைன் என ஸ்மார்ட்போன் மையமாகி வருகிறது. அந்தவகையில் ஒருவருக்கு நம் இருப்பிடத்தை சேர் செய்ய வேண்டும் என்றால் எளிமையாக வாட்ஸ்அப் சென்று, லைவ் லொகேஷன், கரெண்ட் லொகேஷன் சேர் செய்யலாம். ஆனால் அதைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியாது. உங்களது நண்பர்கள், உறவினர்களை எளிமையாக தொடர்பு கொள்ள முடியாது. எளிமையாக வழிகாட்டாது. பயனர்கள் வாட்ஸ்அப்- இன்-ஆப்-மேப்-வியூ வழங்கும் லொகேஷன் காட்சி மட்டுமே பார்க்க முடியும்.

Advertisment

ஆனால், கூகுள் மேப்ஸ் அப்படி அல்லாமல் கூடுதல் வசதிகளை வழங்குகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் உங்கள் லைவ் லொகேஷனை சேர் செய்தால் real-time மட்டுமல்ல உங்கள் இடத்திற்கு மற்றவர்கள் எளிமையாக பயணம் செய்யவும் முடியும். நடந்தும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு எளிமையாக வழிகாட்டவும் செய்கிறது. குறிப்பாக உங்கள் இடத்திற்கு அறிமுகமில்லாத உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் வந்தால் கூகுள் மேப்ஸ் லொகேஷன் உதவியாக இருக்கும்.

கூகுள் மேப்ஸுடன் லைவ் லொகேஷன் சேர் செய்வது எப்படி?

Step 1: முதலில் உங்கள் போனில் லொகேஷன் (Location toggle) ஆன் செய்து கொள்ள வேண்டும். பின், கூகுள் மேப்ஸிற்குள் செல்ல வேண்டும். கூகுள் மேப்ஸின் முன்பக்கத்தில் உள்ள 'மை லொகேஷன்' (‘My location’ ) ஆப்ஷன் கொடுக்க வேண்டும். கீழேகொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும். 'மை லொகேஷன்' ஆப்ஷன் கொடுத்தால், மேப் உங்கள் இருப்பிடத்தை சுட்டிக்காட்டும். நீல புள்ளியுடன் சுட்டிக்காட்டும்.

Advertisment
Advertisements
publive-image
‘My Location’ on Google Maps

Step 2: அடுத்து, வலதுபுறத்தில் உள்ள உங்கள் profile picture பக்கத்தை கிளிக் செய்து உள்ளே போகவும். அங்கு ‘லொகேஷன் சேர்ரிங்’(location-sharing) ஆப்ஷன் கொடுத்தால் 'நியூ சேர்' (New Share) என்ற பட்டன் காண்பிக்கும்.

நியூ சேர் கொடுத்தால், எவ்வளவு நேரம் வைவ் லொகேஷன் சேர் செய்ய வேண்டும் என்ற டைமர் செட் செய்து கொள்ளலாம். 15 நிமிடம் முதல் ஒரு நாள் வரை வைவ் லொகேஷன் சேர் செய்ய முடியும்.

publive-image

Step 3: லொகேஷன் டைமர் செட் செய்த பின், லைவ் லொகேஷன் சேர் செய்யலாம். வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் மற்றவர்களுக்கு சேர் செய்யலாம். லிங்க்-காக சென்று விடும். லிங்க் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தி லொகேஷன் பார்த்துக் கொள்ளலாம். பயணம் செய்ய வேண்டும் என்றாலும் ‘Directions’ஆப்ஷன் கொடுத்து real-time பார்த்து தெரிந்து பயணம் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: