நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் சர்வதேச அளவில் ஓடிடி துறையில் முன்னணி வகிக்கிறது. உலகெங்கும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் பயன்படுத்தப்படுகிறது. 1 மாதம், 3 மாதம், 6 மாதம் என பயனர்களுக்கு ஏற்ற வகையில் சந்தா திட்டங்கள் உள்ளது. அந்தவகையில் சந்தா திட்டத்திற்கு ஏற்ப அக்கவுண்டை குறிப்பிட்ட நபர்களுக்கு பகிர்ந்து பயன்படுத்தலாம்.
அனைவருக்கும் தனித்தனியாக Folder ப்ரொஃபைல் ஏற்படுத்தி, பயன்படுத்தலாம். நாம் பார்த்த, அல்லது நமக்கான recommendations வீடியோக்கள் அந்த ப்ரொஃபைலில் சேமித்து வைக்கப்படும். நாம் சமீபத்தில் பார்த்த படம், சீரிஸ்க்கு ஏற்ப recommendations வீடியோக்கள் அதில் காண்பிக்கப்படும். இந்நிலையில், ஒரே அக்கவுண்ட்டில் பலர் பகிர்ந்து பயன்படுத்துவதால், நமது Folder ப்ரொஃபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக கிளிக் செய்து பார்க்க முடியும். பிரைவசி இருக்காது. இதை நீங்கள் கூட நினைத்திருப்பீர்கள். இதற்கு தீர்வாக தனி நபர் ப்ரொஃபைலை லாக் செய்யும் வசதி உள்ளது. எளிதாக உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்து வைத்துக் கொள்ளலாம்.
Step 1: லேப்டாப்பில் நெட்ஃபிலிக்ஸ் லாக்கின் செய்யவும்
ஆம், போன் மூலமாக நேரடியாக உங்கள் ப்ரொஃபைல் லாக் செய்ய முடியாது. லேப்டாப் அல்லது கம்யூட்டரில் வெப் பிரவுசரில் நெட்ஃபிலிக்ஸ் லாக்கின் செய்ய வேண்டும்.
Step 2: அக்கவுண்ட் செட்டிங்ஸ்
நெட்ஃபிலிக்ஸ் main ஸ்கீரினில் வலப்புறத்தில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்து, ‘Account’ ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். அக்கவுண்ட் செட்டிங்ஸில் கீழே வந்தால் ‘Profile and Parental Controls section’ என வரும். அதைக் கிளிக் செய்தால், அக்கவுண்ட் பயன்படுத்தும் மொத்த நபர்களின் ப்ரொஃபைல் அதில் இருக்கும்.
Step 3: லாக் ப்ரொஃபைல்
மொத்த நபர்களின் ப்ரொஃபைலில் உங்கள் ப்ரொஃபைலை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ப்ரொஃபைல் அருகில் உள்ள drop-down ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். இதில், Profile Lock setting ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது, உங்கள் நெட்ஃபிலிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதை கொடுத்தால், 4 இலக்க கோடு (four-digit code) அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள நம்பருக்கு வரும். அதைப் பதிவிட்டு புதிய கோடு செட் செய்து Save செய்து கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ப்ரொஃபைல் லாக் ஆக விடும்.
நீங்கள் மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் பயன்படுத்தும்போது, உங்கள் ப்ரொஃபைல் செல்ல கோடு கொடுத்து உள் சென்று பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil