/tamil-ie/media/media_files/uploads/2018/10/facebook3d_photo_1.jpg)
Facebook 3D photo upload
Facebook 3D photo feature :முகநூலில் தற்போது உங்களில் 3D புகைப்படங்களை பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆனால் அதற்கு உங்களுக்கு தேவையானதெல்லாம் 2 கேமராக்களுடன் கூடிய ஐபோன் தான்.
ஐபோன் 7 ப்ளஸ், ஐபோன் 8 ப்ளஸ், ஐபோன் X, ஐபோன் XS போன்கள் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியினை பயன்படுத்தி 3D போட்டோவினை முகநூலில் பதிவு செய்யலாம். தற்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் போன்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Facebook 3D photo feature பயன்படுத்துவது எப்படி ?
எப்படி முகநூலில் 3D புகைப்படங்களை பதிவேற்றுவது என்பது தொடர்பான வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தது முகநூலின் Facebook 360 என்ற பக்கம்.
உங்கள் மொபைலில் இருக்கும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனை ரீஸ்டார்ட் செய்யவும். புதிய ஃபேஸ்புக் வெர்சனில் மட்டுமே இந்த 3D புகைப்படங்கள் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ரீஸ்டார்ட் செய்தவுடன் உங்களால் 3D போட்டோ ஆப்சனை காண இயலும்.
ஃபேஸ்புக்கில் புதிய போஸ்ட் போடுவதற்கான இடத்தில் What’s on your mind - இந்த ஸ்பேசை தேர்வு செய்தால் வரிசையாக புதிய தேர்வுகள் உருவாகும். அதில் பார்ட்டி, போட்டோ/வீடியோ, டேக் பீப்பிள், ஃபீலிங்/ஆக்டிவிட்டி/ஸ்டிக்கர் ஆப்சன்களுக்கு கீழ் 3D போட்டோ ஆப்சன் இருக்கும்.
3D போட்டோ ஆப்சனை தேர்வு செய்தால், உங்கள் போனில் எடுக்கப்பட்ட அனைத்து போர்ட்ரைட் போட்டோக்களும் இருக்கும். அதில் ஒன்றை நீங்கள் 3D போட்டோ ஆப்சன் மூலம் அப்லோட் செய்யலாம்.
ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அம்சம் வெளியாகுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை ஃபேஸ்புக் நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.