Advertisment

உலக அளவில் முடங்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள்... விளக்கம் அளித்த நிறுவனம்

Facebook and Instagram Down for users : சர்வரில் ஏற்பட்ட பக் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் அளித்தது முகநூல் குழுமம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Facebook and Instagram Down, Facebook and Instagram Global Down for users

Facebook down

Facebook and Instagram Down : சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் நவம்பர் 20ம் தேதி உலகின் பல்வேறு இடங்களில் முடங்கியது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தங்களின் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

Advertisment

அதில் “எங்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களின் முகநூல் பக்கத்தை அக்சஸ் செய்ய இயலவில்லை என்று தெரியும். இதனை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். மிக விரைவில் இந்த பிரச்சனை களையப்படும்” என்று கூறியிருந்தது.

Facebook and Instagram Down குறித்து ட்வீட் செய்த முகநூல் நிறுவனம் :

இது குறித்து பின்னர் அறிக்கை வெளியிட்டிருந்த பேஸ்புக், தங்களின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இது போன்று முகநூலை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளாதாக கூறியிருந்தது.

இன்று காலை மீண்டும் “சர்வரில் உருவான பிரச்சனை முற்றிலுமாக சரி செய்யப்பட்டுவிட்டது. இனி மக்கள் தங்களின் விருப்பம் போல் முகநூலை பயன்படுத்தலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று கூறியிருக்கிறது முகநூல் நிறுவனம்.

இது தொடர்பாக தங்களின் ட்விட்டர் பக்கத்திலும் முறையான அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அறிவித்திருந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் லாக் - இன் செய்ய இயலாத நிலையும், நியூஸ் ஃபீட் லோட் ஆகாத நிலையும் நேற்று ஏற்பட்டது.

Instagram Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment