பேஸ்புக்கில் இடம்பெறும் கிரிப்டோகரன்ஸி சம்பந்தமான விளம்பரங்களுக்கு அந்நிறுவனம் தடைவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புளை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நியூஸ்ஃபிட் பக்கத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, அடுத்த அதிரடியாக கிரிப்டோகரன்ஸி குறித்த விளம்பரங்களுக்கு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது.
பொது மக்களிடம் தற்போது, கிரிப்டோகரன்ஸி குறித்த எதிர்பார்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்ஸி வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், ஜியோ நிறுவனத்தில் பெயரில் சமீபத்தில் மோசடி கும்பல் ஒன்று கிரிப்டோகரன்ஸி விற்கப்படுவதாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது. தகவல் கசிந்த பின்பு ஆன்லைன் பக்கம் முடக்கப்பட்டது.
கிரிப்டோகரன்ஸி விளம்பரங்கள் அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. எனவே, பொதுமக்களிம் பாதுகாப்பு கருதி ஃபேஸ்புக் நிறுவனம் அந்த விளம்பரங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. இந்த விளம்பரங்களில் இடம்பெறும் உண்மையான மற்றும் பொய் நிறுவனங்கள் குறித்து எந்தவித தெளிவான ஆதரமும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லை என்பதால் கிரிப்டோகரன்ஸி விளம்பரங்களுக்கு அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.
அத்துடன், ஃபேஸ்புக்கில் இடம்பெரும் விளம்பரங்கள் மூலமே, யூசர்களின் தகவல்கள் வெளி நபர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளதால் அந்நிறுவனம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஒரு சில நேரங்களில் இதுப்போன்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்பு, இன்பாக்ஸ் மெசேஜில் இதுக் குறித்த விளம்பரங்கள் அல்லது லிங்குகள் வந்தால் அதுக் குறித்து புகார் அளிக்கவும் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெகு விரைவில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.