யூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்!

தன்னுடைய புகைப்படம், ஸ்டேட்டஸ், தனிப்பட்ட சில தகவல்களை  தனது நண்பர்களுக்கு மட்டும் காட்ட வேண்டும்

14 மில்லியன் ஃபேஸ்புக் யூசர்களின்  தனிப்பட்ட தகவல்கள், தற்போது பப்ளிக் போஸ்டில் கசிந்திருக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

பல கோடி யூசர்களை கொண்டுள்ள  ஃபேஸ்புக் செயலி,   சில மாதங்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் சிக்கி பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்திருந்த நிலையில்  தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

யூசர்கள் பிரைவட் ஆஃபனில் பகிர்ந்த தகவல்கள் எல்லாம் தற்போது பிரைவட் ஆகியுள்ளது. சுமார் 14 மில்லியன் யூசர்களின் தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளனர். மென்பொருளில் ஏற்பட்ட BUG என்ற தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது, ஒருவர் தன்னுடைய புகைப்படம், ஸ்டேட்டஸ், தனிப்பட்ட சில தகவல்களை  தனது நண்பர்களுக்கு மட்டும் காட்ட வேண்டும், பொதுவெளியில் தெரியாமல் பிர்ரைவட் ஆஃபனில் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பி தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தற்ப்போது இந்த வசதியில் தான் பிரச்சனை எழுந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை பக் ஏற்படுத்தியுள்ளது. இந்த பக் ஏற்படுத்திய தொழில் நுட்ப காரணமாக 14 மில்லியன் ஃபேஸ்புக் யூசர்களின்  தனிப்பட்ட தகவல்கள், தற்போது பப்ளிக் போஸ்டில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு யூசர்களின் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close