Facebook Data Breach : மிக சமீப காலமாக முகநூல் தளத்தில் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. மிக சமீபத்தில் 5 கோடி பயனாளிகளின் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டன என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் மூன்று கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.
திருடப்பட்ட தகவல்களில் 1.5 கோடி நபர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் அடங்கும். மீதம் இருக்கும் 1.4 கோடி மக்களின் கணக்குகளில் அவர்களின் ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ் போன்ற தகவல்களும் திருடப்பட்டிருக்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தகவல்கள் திருடப்பட்ட மூன்று கோடி பயனாளிகளுக்கும் தங்களின் கணக்கினை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கஸ்டமைஸ்ட் மெசேஜ்கள் முகநூல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டிருக்கிறது.
Facebook Data Breach ஆல் பாதிப்படையாத பேஸ்புக் பகுதிகள்
இந்த தகவல் திருட்டினால், பயனாளிகளின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஒகுலஸ், வொர்க்ஸ்பேஸ், முகநூல் பக்கங்கள், அங்கு நடைபெறும் பணப்பரிவர்த்தனை முறைகள் ஆகியவற்றிற்கும் எந்த விதமான தீங்கும் ஏற்படவில்லை என முகநூல் நிறுவனம் திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
இது வரை எந்த பகுதியில் இருக்கும் முகநூல் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் எஃப்.பி.ஐ உதவியுடன் இந்த பிரச்சனையை விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் கூறியிருக்கிறது.