Advertisment

5 வருடங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தான்... மார்க்கின் அதிரடியால் ஆடிப்போன ஊழியர்கள்

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அவர்களின் இடத்திற்கு ஏற்றாற் போல்  மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 வருடங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தான்... மார்க்கின் அதிரடியால் ஆடிப்போன ஊழியர்கள்

Facebook employees going to do permanent work from home for the next 5 years : பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் அதிகமானோர் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் படிக்க : ஸ்டான்லி மருத்துவமனையில் 17 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ?

உலகின் மிகப் பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான முகநூல் நிறுவனத்தின் ஊழியர்கள், கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள்.

இக்கட்டான சூழலில் கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 அல்லது 10 ஆண்டுகள் வரை அவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் சி.இ.ஒ மார்க் ஜுக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.

அந்நிறுவனத்தில் மொத்தம் 48 ஆயித்துக்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அடுத்த 5 வருடங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அவர்களின் இடத்திற்கு ஏற்றாற் போல்  மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment