முகநூல் profile lock அம்சம் – பெண்கள் இனி ஆன்லைனில் சேஃப்

Facebook India: முகநூல் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் பயனர்கள் தங்களது சுயவிவரத்தை (profile) lock செய்துக் கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தவிர மற்ற எவரும் உங்கள் பக்கத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் இடுகைகளை பார்ப்பதையும், profile picture ஐ விரிவுப்படுத்துவதையும் இது…

By: Published: May 22, 2020, 9:27:25 PM

Facebook India: முகநூல் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் பயனர்கள் தங்களது சுயவிவரத்தை (profile) lock செய்துக் கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தவிர மற்ற எவரும் உங்கள் பக்கத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் இடுகைகளை பார்ப்பதையும், profile picture ஐ விரிவுப்படுத்துவதையும் இது தடுக்கிறது. பெண் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஆண் பயனர்களும் locked profile அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த வாரம் இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வெளிவரும்.

Profile picture guardன் அடுத்ததாக வரும் இந்த அம்சம் பயனர்களிடமிருந்து கருத்துக்களை கணக்கில் எடுத்துள்ளது, என முகநூலின் Product Manager Roxna Irani தெரிவித்துள்ளார்.

WhatsApp Web: எளிய வழியில் தகவல் பறிமாற்றம், அப்டேட் ஆகிவிட்டீர்களா?

நாங்கள் முதலில் சுயவிவரத்தில் இருந்து தொடங்கினோம், ஏனென்றால் இந்த படத்தை பதிவிறக்கம் செய்து பகிரப்பட்டுவிடும் என பெண்கள் பதட்டம் அடைந்தனர். எனவே நாங்கள் முதலில் profile picture guard அறிமுகப்படுத்தினோம். பின்னர் காலப்போக்கில், இது தற்போதைய profile picture க்கு அப்பால் மற்ற புகைப்படங்களுக்கும் நீண்டுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம், என அவர் மேலும் கூறினார்.

Profile lock இயக்கப்பட்டதும், பயனர்கள் அந்த நபரின் profile pictures மட்டும் தான் பார்க்க முடியும். அதை விர்வுப்படுத்தவோ அல்லது அந்த பக்கத்தில் வேறு எதையும் பார்க்கவோ முடியாது. ஒரு நீல பேட்ஜ் (blue badge) அந்த profile லாக் (locked) செய்யப்பட்டுள்ளது என்பதை காண்பிக்கும். Profile லில் உள்ள more options என்ற விருப்ப தேர்வில் இருந்து இந்த அம்சத்தை access செய்து Lock Profile ஐ தட்ட வேண்டும். Locking a profile என்றால் என்ன என்பதை இந்த செயல்முறை பயனர்களுக்கு தெளிவாக தெரிவிக்கும்.

ஆசிட் அட்டாக்கை நியாயப்படுத்தும் வீடியோ : பிரபலத்தின் கணக்கை முடக்கிய டிக்டாக்

இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், பயனர்கள் பொதுவில் இடுகையிட முடியாது. சுயவிவரம் (Profile) பூட்டப்பட்டுள்ளது என்பதை பயனருக்கு நினைவுபடுத்தும் ஒரு பாப் அப் தோன்றும். சுய விவரத்தை திரும்ப unlock செய்த பிறகு தான் பொது இடுகை சாத்தியமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Facebook enables profile lock for indian users to ensure women safe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X