Advertisment

தன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது பேஸ்புக்

அகொய்லா, டெத்தர் - டென்னா போன்ற ட்ரோன் திட்டங்களை ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Drone Project Facebook

Drone Project Facebook

பேஸ்புக் நிறுவனத்தின் எஃப் 8 மாநாடு சென்ற வருடம் மே மாதம் நடைபெற்றது. அதில் அவசர காலங்களில் தேவைப்படும் ஹெலிக்காப்டர் ட்ரோன் திட்டம் பற்றிய அறிவிப்பினையும் அது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி பற்றியும் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு பின்பு அத்திட்டம் கைவிடப்பட்டது.

Advertisment

டெத்தெர் - டென்னா என்று பெயர் வைக்கப்பட்டிருந்த அத்திட்டம் நாங்கள் நினைத்தது போல் சரியாக வரவில்லை என்பதால், டெர்ராகிராப், மில்லிமீட்டர் வேவ் மற்றும் ஹை ஆல்ட்டிடியூட் ப்ளாட்ஃபார்ம் ஸ்டேசன் (high altitude platform station) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.

டெத்தர் - டென்னா திட்டத்தின் படி, அவசர காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவு சமயங்களில் தொலைத்தொடர்பு, பவர், மற்றும் இணைய வசதியினை தடையின்றி பெருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

ஜூன் மாதத்தில் மீண்டும் பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய மற்றும் ஒரு ட்ரோன் திட்டத்தினை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் ட்ரோன்கள் மூலமாக, பல்வேறு இக்கட்டான இடங்களில் வாழ்ந்துவரும் சுமார் 4 பில்லியன் மக்களுக்கு இணைய வசதியினை ஏற்படுத்தி தர விரும்பியது பேஸ்புக். அகொய்லா என்று அத்திட்டத்திற்கு பெயரிட்டிருந்தார்கள். 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்திட்டத்தினை 2017ல் வெற்றிகரமாக முடித்தார்கள். ஆனால் காரணம் ஏதும் அறிவிக்கப்படாமலே அத்திட்டத்தையும் கைவிட்டது பேஸ்புக் நிறுவனம்.

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment