Facebook, Instagram release news features for Diwali Tamil News : இந்திய மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட்டங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தாலும், கொரோனா பரவல் காரணத்தினால் நண்பர்கள் / உறவினர்களின் வீடுகளுக்குச் செல்ல பயந்த மனநிலையில் இருக்கின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலானவர்கள் விர்ச்சுவல் தீபாவளியை நோக்கி நகர்கின்றனர். அதாவது சமூக ஊடக தளங்கள் வழியாக வாழ்த்துகள் மற்றும் இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழியாகப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் அனுப்பிக் கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட விர்ச்சுவல் தீபாவளியைக் கொண்டாட இந்தியர்களுக்கு உதவுவதற்காக, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் பல சுவாரஸ்யமான புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட உதவும் வகையில் ஃபேஸ்புக் புதிய பெர்சனலைஸ்டு க்ரீட்டிங்ஸ், தீபாவளி அவதார்ஸ் மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
*தீபாவளி ஹேஷ்டேக் சவால்கள்: பேஸ்புக் பயனர்கள் தங்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் #DiwaliAtHomeChallenge என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், தீபாவளியின்போது உபயோகப்படுத்தும் விளக்குகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது போன்ற DIY வீடியோக்களையும் உருவாக்கலாம். அதனை #DIYDiwaliChallenge என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்களையும் இந்த சவால்களைச் செய்யச் சொல்லி சவால் விடலாம்.
*அவதார்: அவதார் பின்னணியுடன் சமூக ஊடக தளம் இப்போது சிறப்புத் தீபாவளி போஸ்டர்களை உருவாக்கியுள்ளது. வண்ணமயமான பின்னணியில் வாழ்த்துகளைப் பதித்து அவதாரத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
அவதாரத்தை உருவாக்க, உங்கள் மொபைல் சாதனத்தில் ‘போஸ்ட்டை உருவாக்கு’ என்பதை க்ளிக் செய்து, ‘பின்னணி வண்ணம்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் தீபாவளி பின்னணியைத் தேர்ந்தெடுத்தால், நொடியில் சிறப்பு போஸ்ட் ரெடி.
*தீபாவளி கன்டென்ட் : அனைத்து குறிப்பிட்ட தீபாவளி உள்ளடக்கத்தையும் கண்டுபிடிக்க நீங்கள் தேடல் பட்டியில் #Diwali2020 மற்றும் # #ShubhDiwali2020 என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, தீபாவளிக்கு ‘ஷேர் யுவர் லைட்(Share Your Light)' என்ற புதிய AR எஃபெக்ட் அறிமுகப்படுத்தப்படுவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இது தவிர, ஷெர்லி செட்டியா, குஷா கபிலா மற்றும் அர்ஜுன் கனுங்கோ போன்ற படைப்பாளர்களின் பல IGTV நிகழ்ச்சிகளையும் இன்ஸ்ட்டா வெளியிட்டுள்ளது.
தீபங்கள், பண்டிகை விளக்குகள் மற்றும் வண்ணங்களால் ஈர்க்கப்பட்டதுதான் இந்த ஷேர் யுவர் லைட் AR எஃப்பக்ட். Festive diya என்று பெயரிடப்பட்டுள்ள இது, எஃப்பக்ட் கேலரியில் இருக்கும். ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய ஏழு மொழிகளில் இது கிடைக்கிறது.
https://open.spotify.com/show/3qdrz0Kb0wRugR0FLgDg5t
ஷெர்லி செட்டியாவின் 'சண்டேஸ் வித் ஷெர்லி', அர்ஜுன் கானுங்கோவின் 'அர்ஜுன் ரைட் நவ்' ஆகியோர்களின் புதிய IGTV நிகழ்ச்சிகளும் உண்டு. நிகுஞ்ச் லோட்டியா அல்லது பியூனிக் எழுதிய 'In the Nick of time', ஆர்.ஜே. அபினவ் எழுதிய 'ஷாக்யூமென்டரிஸ்' மற்றும் லிசா மிஸ்ராவின் 'ஃபீல் ஹொனா சாஹியே' ஆகியவை அடங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.