ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் மார்க் சூக்கர்பெர்க் “ஃபேஸ்புக் வதந்திகள் மற்றும் போலியான செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு அதிக முக்கியதுவம் தரவில்லை என்றும், ஃபேஸ்புக் மூலமாக வெறுப்புகளை மக்கள் எப்படியாக பரப்புகிறார்கள் என்பதைப் பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
வதந்திகள் தொடங்கி, வெளிநாடுகளில் நடக்கும் தேர்தலில் ஏற்படும் பாதிப்புகள், வெறுப்புகளையும் வன்முறைகளையும் உருவாக்கும் பதிவுகளையும் மக்கள் எப்படியாக பதிவிடுகிறார்கள், பயனாளிகள் தனித் தகவல்கள் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு குறித்தும் அதிகமாக அக்கறையுடன் ஃபேஸ்புக் செயல்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வருத்தத்தை பதிவு செய்துள்ள மார்க் சூக்கர்பெர்க்
இது போன்ற மிகவும் முக்கியமான விஷயங்களில் எங்களின் பொறுப்புகள் என்ன என்பதை நாங்கள் உணரவில்லை, இது முழுக்க முழுக்க எங்களின் தவறு.. என்னுடைய தவறு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால் தான் தற்போது ஃபேஸ்புக்கின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் நுட்பமாக கண்காணித்து வருகிறோம். எங்களுடைய பொறுப்பும் கடமையும் என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றாற் போல் நாங்கள் செயல்படத் தொடங்குகிறோம் என்று கூறியிருக்கிறார் மார்க்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மாற்றங்களை உருவாக்கும் முனைப்பில் ஃபேஸ்புக் நிறுவனம்
மக்களுக்கிடையே சுமூகமான உறவுமுறைகளை முகநூல் உருவாக்கவில்லை. ஆகவே எங்களால் முடிந்த அளவு பாசிட்டிவான பக்கத்தில் மக்களை ஒருங்கிணைக்க முயல்கிறோம்.
வெறுப்பு மற்றும் வன்முறை பதிவுகளுக்கு எதிராகவும் வதந்திகளுக்கு எதிராகவும் பயனாளிகளின் தனியுரிமை பாதுகாப்பு தொடர்பாகவும் இனி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கொண்டு வருவோம் என்றும் மார்க் குறிப்பிட்டிருக்கிறார்.