சமூகவலைதள நிறுவனங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் 4 அப்டேட்களை கொடுத்தது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரீல்ஸ், வீடியோ, புகைப்படம் பதிவிடுவதில் மாற்றங்கள் கொண்டு வந்தன. இது பயனர்களிடையே வரவேற்றை பெற்று வருகிறது.
அப்டேட் வழங்கப்படுவதில் பயனர்களின் பிரைவசி பாலிசி முக்கிய பங்கு வகிக்கிறது. அப்டேட்டில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்கின்றன. அந்தவகையில் பேஸ்புக் மெசஞ்சரில் தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இந்த வசதி இருந்தாலும், அனைத்து சாட் மற்றும் அழைப்புகளுக்கும் டிஃபால்ட் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக ஒவ்வொரு சாட்டிற்கும் பயனர்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை ஆன் செய்ய வேண்டும். தற்போது அனைத்து சாட் மற்றும் அழைப்புகளுக்கும் டிஃபால்ட் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-end encryption) வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்றால் என்ன?
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் தனியுரிமை பாதுகாப்பு வசதி ஆகும். அதாவது தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே டிக்ரிப்ட் செய்ய முடியும். வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அந்த நிறுவனம் கூட அந்த தகவலை பார்க்க முடியாது.
அதாவது, பேஸ்புக் நிறுவனத்தால் கூட பயனர்களின் தகவலை பார்க்க, பயன்படுத்த முடியாது. பேஸ்புக் நிறுவனம் மற்றொரு வசதியையும் அறிமுகப்படுத்துகிறது. ‘secure storage’ என்ற வசதியை அறிமுகப்படுத்துகிறது. அதாவது என்கிரிப்ட் செய்யப்பட்ட சாட்களை cloud-இல் பேக்அப் எடுத்துக் கொள்ளும் வசதியாகும்.
மேலும் சில அம்சங்களை unsend messages and syncing deleted messages போன்றவற்றை சோதனை செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”