பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெசேஞ்சர் (Messenger) செயலியில், பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிதாக ‘Secret Chat’ எனப்படும் ரகசிய உரையாடல் அம்சத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த ரகசிய உரையாடல் “எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதியை கொண்டிருப்பதால், பேஸ்புக் உட்பட மூன்றாம் தர செயலியால் மெசேஜ்ஜை பார்வையிட முடியாது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதி உள்ளது.
பேஸ்புக் மெசேஞ்சரில் வீடியோ, ஆடியோ கால் உட்பட அனைத்து குரூப் சாட்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி, குறிப்பிட்ட பயனர்களுக்கு பிட்டா பதிப்பில் வழங்கப்பட்டிருந்தது. தற்போது,அனைவரும் உபயோகிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சமாக, ரகசிய உரையாடலை யாராவது ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ” எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதியை பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக உணருவது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே யாராவது ரகசிய உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.
இதுதவிர, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ரகசிய உரையாடல்களில் GIFகள் மற்றும் ஸ்டிக்கர் அம்சங்கள் கிடைக்கின்றன. Reactions அம்சத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளனர். கமெண்ட்ஸூக்கு ரியாக்ஷன் கொடுப்பது போலவே, குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் செய்தால், ரியாக்ஷன் தேர்வு செய்ய திரையில் தோன்றும்.
மற்ற மெசேஜிங் செயலியை போலவே, குறிப்பிட்ட மெசேஜ்ஜை கிளிக் செய்து ரிப்ளை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அப்டேட்டில் மெசேஜை forward செய்வதிலும் புது வசதியையும் பெறலாம்.
forward பட்டனை கிளிக் செய்ததும், பல வகையான ஷேர் விருப்பங்கள் திரையில் தோன்றும். ஒரு நபருக்கோ அல்லது பலருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பலாம், புதிய குழுவை கூட நீங்கள் உருவாக்கி மெசேஜை forward செய்யலாம்.
அதேபோல், end-to-end encrypted chatகளில் உண்மையான கணக்குளை அறியும் பொருட்டு Verified badge-கள் காண்பிக்கப்படும். மீடியாவை டவுன்லோடு செய்திட, அதை நீண்ட நேரம் பிரஸ் செய்தால், வீடியோ அல்லது படத்தை Save செய்ய முடியும்.
இறுதியாக, ரகசிய உரையாடலில் வீடியோ அல்லது போட்டோ அனுப்பும் போது, அதனை எடிட் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil