உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் மெசன்ஜரின் க்ரூப் வீடியோ காலில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தொழில்நுட்ப உலகில், ஃபேஸ்புக் செயலி அனைவரின் விருப்பமான ஒன்று. ஃபேஸ்புக் பக்கம் தொடங்கிய நாளிலிருந்துப் இன்று வரை இளைஞர்களுக்கு அதன் மேலுள்ள ஈர்ப்பு இன்று வரை குறையவில்லை. யூசர்களை கவரும் வகையில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மெசன்ஜர் ஆப்.
இதன் மூலம், உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுடன் சேட்டிங், ஃபோட்டோக்கள், வீடியோக்கள், எமோஜி ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ளலாம். மினி வாட்ஸ் அப் செயலியைப் போலவே செயல்படும் இதில், ஃபேஸ்பேக் நிறுவனம் புதிய புதிய அப்டேட்டுக்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங்கில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெசன்ஜர் ஆபில் குரூப் வீடியோ காலிங் செய்ய முதலில் அனைத்து அழைப்புகளையும் கட் செய்ய வேண்டும். அதன் பின்பு பின் மீண்டும் இன்பாக்ஸ் மூலம் புதிய அழைப்பினை மேற்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் புதிய அம்சம் வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது இணைப்பை துண்டிக்காமல், நண்பர்களை இணைத்து குரூப் காலிங் செய்வதேயாகும்.
வீடியோ அல்லது வாய்ஸ் கால் அழைப்பில் இருக்கும் போதே ஆட் ப்ர்சன் (add person) தேர்வு செய்து பேச வேண்டிய நபரை இணைத்துக் கொள்ளலாம். அத்துடன் க்ரூப் காலிங் அம்சங்களில் இன்னமும் ஃபில்ட்டர்கள் மற்றும் எஃபெக்ட்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் இந்த புதிய அம்சம் நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுடன் உரையாடும் போதே மெசன்ஜரில் உரையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.