Facebook lets users transfer their media posts to other platforms Tamil News : தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய ஸ்ட்ராடஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் பயனர்கள் தங்கள் ஃபேஸ்புக் டேட்டாவை மற்ற தளங்களுக்கு மாற்ற அனுமதிக்கிறது. உங்கள் எல்லா புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள், குறிப்புகள் மற்றும் விளம்பரம் தொடர்பான தகவல்களை இந்த பிளாட்ஃபார்மிலிருந்து பிற தொடர்புடைய சேவைகளுக்கு மாற்ற இந்த சேவை பயனர்களை அனுமதிக்கிறது. இதிலிருந்து வெளியேற விரும்பும் நபர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும்.
பெரும்பாலான பயனர்களின் ஃபேஸ்புக் தகவல்களுக்கு இந்த சேவை ஏற்கனவே கிடைத்தது. முந்தைய செயல்பாட்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தபோதிலும், பயனர்கள் தங்கள் டெக்ஸ்ட் போஸ்டுகளையும் குறிப்புகளையும் பதிவிறக்க முடியவில்லை. திங்கள் முதல், இந்த கூறுகளை காப்புப் பிரதி எடுப்பதும் சாத்தியமாகும்.
“நாங்கள் இந்த கருவியைத் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மனதில் கொண்டு வடிவமைத்துள்ளோம். பரிமாற்றம் தொடங்குவதற்கு முன்பு உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் சேவைகளுக்கு இடையில் தகவல்கள் செல்லும்போது குறியாக்கம் செய்கிறோம். எனவே ,அது பாதுகாப்பாக மாற்றப்படும் என்று நீங்கள் நம்பலாம்” என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற ஊடகங்களை கூகுள் புகைப்படங்கள், டிராப்பாக்ஸ் மற்றும் பிற சேவைகளில் பதிவேற்ற முடியும் என்றாலும், போஸ்டுகள் மற்றும் குறிப்புகள் இப்போது கூகுள் டாக்ஸ், பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களுக்குக் காப்புப் பிரதி எடுக்க முடியும். எதிர்காலத்தில் அதிக தகவல் வகைகளை ஏற்றுமதி செய்யப் பயனர்களை விரைவில் அனுமதிக்கும் என்றும் ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை எவ்வாறு பதிவிறக்குவது?
பயனர்கள் தங்கள் ஃபேஸ்புக் தகவல்களை டெஸ்க்டாப் பிரவுசரை பயன்படுத்தி சில எளிய முறைகளில் பதிவிறக்கம் செய்து மாற்றலாம்.
ஸ்டெப் 1: ஃபேஸ்புக் முகப்பு பக்கத்தில், திரையின் மேல்-வலது பகுதியில் கீழ்தோன்றும் அம்புக்குறியைத் தேடுங்கள். அதனை கிளிக் செய்தால் கூடுதல் விருப்பங்கள் திறக்கப்படும். அமைப்புகள் மற்றும் தனியுரிமை / அமைப்புகள் / உங்கள் ஃபேஸ்புக் தகவலைத் தேர்வுசெய்க.
ஸ்டெப் 2: ‘உங்கள் தகவலின் நகலை மாற்றவும்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த உங்கள் ஃபேஸ்புக் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும்.
ஸ்டெப் 3: அடுத்ததாகத் திரை பயனர்களை மாற்ற விரும்புவதைத் தேர்வுசெய்யும். பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள் மற்றும் / அல்லது குறிப்புகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீங்கள் எவ்வளவு பதிவிறக்கம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கும்போது, போட்ட்டுகள் மற்றும் குறிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் அவை அனைத்தையும் மாற்ற வேண்டும்.
ஸ்டெப் 4: டிராப் டவுனில் உங்கள் தகவல்கள் மாற்றும் தளத்தைத் தேர்வுசெய்க. நீங்கள் ஒரு புதிய சேவையைத் தேர்ந்தெடுத்ததும், அந்த சேவையில் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள். இது முடிந்ததும், ‘இடமாற்றத்தை உறுதிப்படுத்து’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil