பேஸ்புக் உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகும். ஏராளமானோர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக்கில் வித்தியாசமான தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைத்து பயனர்களுக்கும் இது ஏற்படவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் வசிக்கும் பயனர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது, அவர்களது News feed பக்கத்தில் பிரபலங்கள் பதிவு, பிரபலங்களுக்கு ரசிகர்கள் யாரேனும் டேக் செய்து பதிவிட்டால் அது அனைவரது News feed பக்கத்திலும் காண்பிக்கப்படுகிறது என புகார் தெரிவித்துள்ளனர். வித்தியாசமான தொழில்நுட்ப கோளாறாக உள்ளது. Eminem, Billie Eilish போன்ற பிரபலமான கலைஞர்களுக்கு அனுப்பபட்ட தகவல்கள் News feedயில் காண்பிக்கப்படுகிறது.
website DownDetector என்ற தளமும் பயனர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வதாக கூறியுள்ளது. இந்திய பயனாளர்கள் சிலரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து பயனர்களிடம் புகார் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை பயனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சைபர் தாக்குதல் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏராளமான பயனர்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil