நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணிநீக்கம் செய்யப்படுவதாக மெட்டா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு முன்னணி ஐ.டி நிறுவனங்களில் கடந்தாண்டு இறுதி மற்றும் இந்தாண்டு தொடக்கத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்து அறிவித்தனர். ட்விட்டர், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், டிஸ்னி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். செலவீனக் குறைப்பு, பொருளாதார பிரச்சனை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்தன.
அந்தவகையில் கடந்தாண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருந்தது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது இரண்டாவது சுற்றி பணி நீக்கத்தை மெட்டா அறிவித்துள்ளது. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணிநீக்கம் செய்யப்படுவதாக மெட்டா தெரிவித்துள்ளது. மேலும் நிறுவன கட்டமைப்பை சமன் செய்யவும் பணிகள் மற்றும் குறைந்த முன்னுரிமை திட்டங்களை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது.
முன்பு ஜுக்கர்பெர்க் 2023-ம் ஆண்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும், மறு சீரமைப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன் ஒரு பகுதியாக பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் 2,80,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் 40% பேர் இந்த ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று layoffs.fyi ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/