ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக்கில் செயல்பட்டு வந்த 200 செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஃபேஸ்புக் மூலம் யூசர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது யூசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முயற்சி தான் 200 ஆப்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை.
இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் , இந்த முடிவு திடீரென்று எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கை சார்ந்து செயல்படும் எந்தெந்த ஆப்களில் யூசர்களின் பாதுகாப்பு குறைவாக உள்ளது மற்றும் டேட்டாக்களை தவறாக பயன்படுத்தும் செயலிகளை எவை என்பதை கண்டுப்பிடிக்க ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சுமார் 1000-க்கும் அதிகமான செயலிகள் ஆய்வு செய்து, இறுதியாக 200 ஆப்களை தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 200 ஆப்களுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கான விசாரணையில் இந்த செயலினால் யூசர்களுக்கு ஆபத்து என்று நிரூபிக்கப்பட்டால் அவை நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த செயலில் யூசர்களை பெருமளவில் கவர்ந்த மை பர்சனாலிட்டி செயலி (my personality app ) அடங்கும்.