ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருக்கும் முக்கிய ஆப்ஷனை மாற்றி இருப்பதாக அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம்,கடந்த 2014 ஆம் ஆண்டு புதிய வசதியை ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்திருந்தது. அதாவது, அன்றைய தினம் உலகம் முழுவதும் எந்த சம்பவம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது என்பதை நாம் ஃபேஸ்புக் செல்லும் போதெல்லாம் ட்ரெண்டிங் ஆப்ஷனில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
வெறும் 5 நாடுகளில் உள்ள ஃபேஸ்புக் யூசர்களுக்கு மட்டுமே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனம் நினைத்தப்படி இந்த ஆப்ஷன் யூசர்களை பெருமளவில் கவரவில்லை. அதன் காரணமாக இந்த வசதியை அதிரடியாக நீக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
எனவே, அடுத்த வாரம் முதல் இந்த வசதி ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்பு நிறுவனம், “ ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்த நிறுவனங்கள் தான் செய்திகளை வழங்குகின்றன என்பதை உறுதி செய்ய புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. கூடிய விரைவில் ட்ரெண்டிங் நியூஸ் வசதி நீக்கப்பட்டு அதற்கு பதில், டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளஹு: என்று கூறியுள்ளது.