தவறுகளை திருத்திக் கொள்ளும் ஃபேஸ்புக்: உங்களுக்கு கொடுக்கிறது ஊக்கத்தொகை!

ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்சைகளை கடந்த ஃபேஸ்புக் நிறுவனம், யூசர்களுக்கு டேட்டா அப்யூஸ் பவுண்டி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஃபேஸ்புக் மீது எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், நடந்த பிழைக்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு அமெரிக்க மக்களின் தகவல்கள் முறைகேடாக வழங்கப்பட்ட விவகாரத்தில் நேற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

5 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், மார்க் பல தகவல்களை தெரிவித்தார். அத்துடன், மீண்டும் இதுப் போன்ற ஃபேஸ்புக்கால் பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம், யூசர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில்,   ஆப் டெவலப்பர்கள் தவறான முறையில்  யூசர்களின் தகவல்களை திருடாத வகையில் பாதுகாக்க புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பக் பவுன்டி திட்டத்தில் பாதுகாப்பு பிழைகள் சரி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக் யூசர்களின் தகவல்களை  எடுத்து, அதை மற்றவர்களுக்கு வழங்குவோர் அல்லது விற்பனை செய்வோர்  பற்றி ஆதரத்துடன் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் டெவலப்பர்கள் யூசர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதை தெரிந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிடம் முறையிட வேண்டும். மற்ற பக் பவுன்டி திட்டங்களை போன்று இல்லாமல், புதிய திட்டம் ஒவ்வொரு அறிக்கையின் தாக்கத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும்.அதன் பின்பு, ஃபேஸ்புக் நிறுவன, இந்த தகவல்களை ஆராய்ந்து அது உண்மை என்றால் அவர்களின் கணக்கிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

×Close
×Close