மெட்டா நிறுவனம் பேஸ்புக்கில் Nearby Friends , weather alerts, location history போன்ற வசதிகளை மே 31 ஆம் தேதி முதல் நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதிகள் நிறுத்தப்பட்டதற்கான சரியான காரணத்தை நிறுவனம் தரப்பில் கூறவில்லை. ஆனால், நீக்கப்படம் வசதிகள் தொடர்பான அனைத்து பயனர்கள் தகவல்கள் பேஸ்புக் சர்வரிலிருந்து நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பேஸ்புக் செயலியில் Nearby Friends வசதி மூலம் பயனர்கள் தங்கள் பேஸ்புக் நண்பர்களிடம் லைவ் லோகேஷனை பகிர்ந்துகொள்ள முடியும். நிறுவனம் கூற்றுப்படி, ஆகஸ்ட் 1, 2022 வரை பயனாளர் சென்றுவந்த இடங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும் ஆனால் அதன் பிறகு ஒட்டுமொத்தமாக டெலிட் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
பயனர்களின் தரவை சேமித்துகொள்வதை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஒருவேளை, பயனர் தரவு சேகரிப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் கண்காணிப்பாளர்களிடமிருந்து வரும் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தாண்டு பிப்ரவரி மாதம், டேட்டாவை மீண்டும் அமெரிக்காவிற்கு மாற்ற அனுமதிக்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நீக்கப்படும் என மெட்டா எச்சரித்தது. இந்த தரவு பரிமாற்றங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஸ்னூப்பிங்கிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கவில்லை என்று கண்டறியப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் சமூக ஊடக நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பேரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil