ஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்

Facebook Catch up - Video call app : மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஆப்புகளை பயன்படுத்தி குரல் அழைப்புகளைச் செய்வதற்கான எளிய வழிகள் இருக்கும்போது, வித்தியாசம் என்னவென்றால், CatchUp உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை வைத்தே செயல்படுகிறது

By: May 30, 2020, 9:06:07 AM

பேஸ்புக் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான NPE Team, CatchUp என்ற ஒரு புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எளிதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் (முதலில் அமெரிக்காவில் மட்டும்) தொலைபேசி அழைப்புகளை ஒருங்கிணைக்க அல்லது 8 நபர்களுடன் குழு குரல் அழைப்புகளை (group voice calls) செய்ய முடியும். பயனர்களுக்கு இன்று ஏராளமான group chat ஆப்கள் இருந்தாலும், CatchUp ஆப் எப்படி தனித்துவமானதாக இருக்கிறது என்றால் பயனர்கள் அரட்டைக்குக் கிடைக்கும்போது அது உங்களுக்குத் தெரிவிக்கும். மேலும் இதில் நீங்கள் குரல் அழைப்புகளை மட்டும் தான் செய்ய முடியும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியாது. மேலும் CatchUp சேவையை பயன்படுத்த முகநூல் கணக்கு தேவை இல்லை, இந்த ஆப் உங்கள் கைபேசியில் உள்ள தொடர்புகள் பட்டியலை வைத்தே செயல்படுகிறது.

CatchUp ஆப், Houseparty ஆப்பில் இருந்து சிலவற்றை உள்வாங்கியுள்ளது போல் தெரிகிறது ஏனென்றால் பயனர்கள் எப்போது தாங்கள் பேச முடியும் என்பதை ஆப்பில் status ஆக அமைக்கலாம். இது Houseparty வீடியோ chat ஆப்பில் உள்ளது போன்றது.

மக்கள் இனிமேல் தொலைபேசி அழைப்புகளை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் எப்போது ஒருவருக்கு பேச நேரம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது மேலும் குறுக்கிடவும் அவர்கள் விரும்புவதில்லை. இதை நிவர்த்தி செய்வது தான் இந்த ஆப்பின் முக்கிய நோக்கம் என முகநூல் விளக்குகிறது.

கோவிட்-19 தொற்று மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட தனிமைப்படுத்துதலுக்கு முன்னரே இது போன்ற ஒரு ஆப்பிற்க்கான யோசனையை முகநூல் விவாதித்தது. ஆனால் தொற்று வேகமாக பரவியதை அடுத்து NPE குழு இந்த ஆப்பை உருவாக்குவதை துரிதப்படுத்தியது.

முகநூலுக்கு சொந்தமான மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஆப்புகளை பயன்படுத்தி குரல் அழைப்புகளைச் செய்வதற்கான எளிய வழிகள் இருக்கும்போது, வித்தியாசம் என்னவென்றால், CatchUp உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை வைத்தே செயல்படுகிறது. பயனர்கள் இந்த ஆப்பை பதிவிரக்கம் செய்ய வேண்டும் ஆனால் ஏற்கனவே உள்ள முகநூல் கணக்கு அல்லது முகநூலுக்கு சொந்தமான வேறு எந்த நிறுவன கணக்கும் தேவையில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Facebook video call facebook catchup catchup launch catch up calls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X