ஃபேஸ்புக்கில் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டன!

ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன

பெரும் சர்ச்சைக்கு மத்தியில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் டெவலபர்கள் மாநாடு அமெரிக்கா மாகாணத்தில் தொடங்கியது. இந்த நிகழ்சியில் ஃபேஸ்புக் நிறுவனத்தை சார்ந்த முக்கிய அதிகாரிகள், மூத்த நிறுவனங்கள் கலந்துக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன.

1. ஃபேஸ்புக் செயலியை கொண்டு டேட்டிங் மற்றும் உறவுமுறைகளை வளர்த்து கொள்ள புதிய வசதியை ஃபேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதை கொண்டு ஃபேஸ்புக் ப்ரோஃபைல் கொண்டு டேட்டிங் செய்ய தனி ப்ரோஃபைலை உருவாக்க முடியும். இவை டேட்டிங் பரிந்துரைகளுக்கு ஏற்ப வேலை செய்யும்.

2. இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள ரத்த தான முகாம்களை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஃபேஸ்புக்கில் வரவுள்ளது.

3. ஆபத்துக்களில் சிக்கியிருப்போருக்கு தேவையான அனைத்து வித முதற்கட்ட தகவல்களையும் ஃபேஸ்புக் வழங்கும். அனைத்து தகவல்களும் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. ஃபேஸ்புக்கில் புதிய 3D போஸ்ட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது இதை கொண்டு நியூஸ் ஃபீடில் உள்ள ஃபேஸ்புக் கேமரா ஏஆர் அம்சங்களை ஒரே க்ளிக் மூலம் பயன்படுத்த முடியும்.

5.  நீங்கள் விரும்பும் தகவல்களை ஷேர் பட்டன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கில் லாக்-இன் (Login) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close