ஒரே நாளில் ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு!

தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஃபேஸ்புக் நிறுவனமும் ஒருவகையில் காரணம் என்று சொல்லப்படுகிறது

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனம், ஒரே 6 பில்லியன் டாலர் வரையில் சரிந்தாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில்,  டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அந்நிறுவனம் அளித்தது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம், ஃபேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விசாரணைக்கு அழைத்துள்ளது.

சுமார் 5 கோடி யூசர்களின் தகவல்களை அந்நிறுவனம், நேர்மையற்ற முறையில்  தந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஃபேஸ்புக் நிறுவனமும் ஒருவகையில் காரணம் என்று சொல்லப்படுகிறது.  யூசர்களின் தகவல்களை பாதுகாப்பது அந்நிறுவனங்களின் கடமையாகும்.

எந்த ஒரு காரணத்திற்காகவும், வாடிக்கையாளர்களின் தகவல்கல் வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா  நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் உதவியது தெரிய வந்துள்ளது.

இதன் எதிரொலியாக், ஃபேஸ்புக்கில் முதலீடு செய்யும், நியூயார்க் முதலீட்டாளர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.  நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

திங்கட்கிழமை(198.3.18) மட்டும் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது.  பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 6 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close