FASTag 2020 New Deadline : அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். அதனை கட்டாயமாக பின்பற்ற டிசம்பர் 1ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. பிறகு போதுமான ஃபாஸ்டேக்குகள் இல்லாத காரணத்தால் அதன் காலக்கேடு நீட்டித்து அறிவிக்கப்பட்டது. பிறகு அது டிசம்பர் 15 ஆக மாற்றப்பட்டது. பின்பு ஜனவரி 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது. போதுமான டேக்குகள் இல்லாத காரணத்தால் இரண்டு முறை மாற்றப்பட்டது.
ஃபாஸ்டேக் என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆர்.எஃப்.ஐ.டி. தான் இந்த ஃபாஸ்டேக். இதனை நீங்கள் உங்கள் கார்களின் முற்பகுதியில் ஒட்ட வேண்டும். நீங்கள் டோல் கேட்டினை தாண்டும் போது தானாகவே உங்களின் ஃபாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு அல்லது வாலெட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். ஒரு முறை டோல் கேட்டில் இருந்து உங்கள் வண்டி க்ராஸ் ஆகிச் சென்றால் உங்களின் வங்கிக் கணக்கு அல்லது ஃபாஸ்டேக் வேலட்டில் இருந்து எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று எஸ்.எம்.எஸ்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
ஃபாஸ்டேக்குகளை எப்படி வாங்குவது ?
நேரடியாக உங்களின் வங்கிகளுக்கு சென்று நீங்கள் உங்களுக்கான ஃபாஸ்டேக்குகளை வாங்கிக் கொள்ளலாம். பின்பு நீங்கள் முறையாக ஃபாஸ்டேக் அக்கௌண்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். உங்களின் வங்கிக் கணக்கில் எப்போதும் பணம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வங்கிகள், தேசிய நெடுஞ்சாலை அத்தாரிட்டி அலுவலகங்கள், ட்ரான்ஸ்போர்ட் டிப்போக்கள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் நீங்கள் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் அமேசான், பேடிஎம், மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆகிய இடங்களில் இருந்தும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். கமர்சியல் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் என்றால் 1800-102-6480 என்ற எண்ணில் அழைத்து பே.டி.எம். மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?
ஒருமுறை டேக்கில் இணைய கட்டணம் ரூ. 100 வசூலிக்கப்படும். மேலும் செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ. 250 வசூலிக்கப்படும். உங்களின் டிஜிட்டல் வாலெட் அல்லது வங்கிக் கணக்கில் எப்போதும் பணம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கார் / ஜீப் / வேன் - ரூ. 150
இலகு ரக வாகனங்கள் - ரூ. 200
பஸ், ட்ரக் - ரூ. 350
பஸ் - 2 ஆக்ஸில்/ மின்பஸ், ட்ரக் - ரூ. 250
ட்ராக்டர் / ட்ரைலெரோடு கூடிய ட்ராக்டர் - ரூ. 450
ட்ரக் 7 ஆக்ஸில் மற்றும் அதற்கு மேல் - ரூ. 550
எர்த் மூவிங் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் - ரூ. 650
FASTag 2020 New Deadline
நீங்கள் வங்கிக் கிளை அல்லது அதன் பாய்ண்ட் ஆஃப் சேல்களில் ஃபாஸ்டேக்குகளை வாங்கியிருந்தால் உங்களின் வங்கிக் கணக்கு நேரடியாக இந்த ஃபாஸ்டேக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டுவிடும். உங்கள் வாகனங்களின் தகவல்களை நீங்கள் இணைத்து ஆக்டிவ் செய்தால் மட்டும் போதுமானது. இதற்கு நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் மை ஃபாஸ்டேக் என்ற ஆப்பினை டவுன்லோடு செய்ய வேண்டும்.
ஃபேங்க் நியூட்ரல் ஃபாஸ்டேக்குகளை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் உங்களின் டிஜிட்டல் வாலெட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் ஃபாஸ்டேக்குகளை நீங்கள் பயன்படுத்தி பே.டி.எம் வாலெட்களில் இணைத்துக் கொள்ளலாம். அப்போது உங்களின் பேடிஎம் வாலெட்களில் இருந்து பணம் டிடெக்ட் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.