ஃபாஸ்டேக் ரூ.3,000 ஆண்டு பாஸ் பெறுவோர் கவனத்திற்கு... தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன?

சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறையில் புதிய ஆண்டு கட்டண முறையை ஆக.15 முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.3000 செலுத்தி பாஸ் வாங்கினால் ஓராண்டில் 200 சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறையில் புதிய ஆண்டு கட்டண முறையை ஆக.15 முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.3000 செலுத்தி பாஸ் வாங்கினால் ஓராண்டில் 200 சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

author-image
WebDesk
New Update
FASTag Rs 3,000 Annual Pass

ஆக. 15 முதல் ஆண்டுக்கு ரூ.3,000 ஃபாஸ்டேக் பாஸ் அறிமுகம்; எப்படிப் பெறுவது? முழு விபரம்!

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 அன்று, ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் என்ற திட்டம் ஒன்றை அறிவித்த அவர், ரூ.3,000 கட்டணம் செலுத்தி இந்த பாஸை பெற்றால், 200 முறை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்க இயலும். அனைவருக்கும் கட்டாயமா? எந்தெந்த வாகனங்களில் பயன்படுத்த இயலும்? புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டுமா? மாநில நெடுஞ்சாலைகளில் இந்த பாஸை பயன்படுத்தி பயணிக்க இயலுமா? என பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் விளக்கம் அளித்துள்ளது. 

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் பெறுவது எப்படி?

Advertisment

வருடம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பாஸ் வாகன ஓட்டிகள், ராஜ்மார்க் யாத்ரா என்ற செல்போன் செயலியிலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ள இயலும். ஒரு பயனர் ஆண்டுக்குள் 200 முறை பயணங்களை மேற்கொண்டுவிட்டால், மீண்டும் ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ள முடியும்.

யாரெல்லாம் இந்த பாஸ் வாங்கலாம்?

இந்த பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் அல்லாத தனியார் வாகனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் வாகனங்களுக்கு, கனரக வாகனங்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படவில்லை. மோசடி செய்து பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக, பாஸ் டி-ஆக்டிவேட் செய்யப்படும். இந்த ஆண்டு ஃபாஸ்டேக் பாஸ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இயக்கப்படும் சுங்கச்சாவடிகளில் மட்டுமே செயல்படும். வாகன ஓட்டிகளுக்கு நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: FASTag Rs 3,000 Annual Pass available from August 15: Who is eligible, how to get it

ஆண்டு பாஸ் வைத்திருப்பவர்கள் மாநில நெடுஞ்சாலைகள், தனியார் மூலம் இயக்கப்படும் சுங்கச் சாலைகள் மற்றும் மாநில அரசால் இயக்கப்படும் விரைவுச் சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்றது. இது சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதோடு, நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்குச் செலவுகளையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர்களின் வசதியை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

Advertisment
Advertisements

யார் யாருக்குக் கிடைக்கும்? வாங்குவது எப்படி?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தவுள்ள ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ், வணிகம் அல்லாத தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மட்டுமே இந்த ஆண்டு பாஸைப் பெறத் தகுதியுடையவை. இந்த ஆண்டு பாஸ், ஆகஸ்ட் 15 முதல் வாங்கக் கிடைக்கும். இதை வாங்குவதற்கு 2 முக்கிய வழிகள் உள்ளன:

  1. ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி (Rajmarg Yatra mobile application)
  2. NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ வலைத்தளம்.

இந்த ஆண்டு பாஸை வாங்கும்போது, எந்தவொரு 3-ம் தரப்பு வலைத்தளங்கள் அல்லது போர்ட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க, அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே பாஸை வாங்குவது அவசியம். இந்த ஆண்டு பாஸ், சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைத்து, அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தனியார் வாகன ஓட்டிகளுக்கு வசதியான மற்றும் சிக்கனமான பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் பெறுவோர் கவனத்திற்கு:

உங்கள் வாகனம் வணிக ரீதியற்ற, தனிப்பட்ட பயன்பாட்டிற்கான காராகவோ அல்லது ஜீப்பாகவோ இருக்க வேண்டும். கனரக வாகனங்கள் (அ) வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்த பாஸ் பொருந்தாது. உங்கள் வாகனத்தில் ஏற்கனவே செயலில் உள்ள ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். புதியதாக ஃபாஸ்டேக் பெறுபவர்கள், முதலில் அதைப் பெற்றுச் செயல்படுத்திய பிறகே ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஃபாஸ்டேக், உங்கள் வாகனத்தின் சரியான பதிவு எண்ணுடன் (VRN - Vehicle Registration Number) இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பதிவு எண் இல்லாத (அ) தவறான எண்ணுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக்குகளுக்கு பாஸ் கிடைக்காது. உங்கள் ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ (Blacklisted) அல்லது ஏதேனும் தகராறில் (under dispute) உள்ளதாகவோ இருக்கக்கூடாது. அத்தகைய ஃபாஸ்டேக்குகள் ஆண்டு பாஸ் பெறத் தகுதியற்றவை.

பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம்: ஒவ்வொரு ஃபாஸ்டேக் ஆண்டு பாஸும் குறிப்பிட்ட ஒரு வாகனத்துடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இதை மற்றொரு வாகனத்திற்கு மாற்ற முடியாது. எனவே, எந்த வாகனத்திற்கு பாஸ் தேவையோ, அந்த வாகனத்தின் ஃபாஸ்டேக் விவரங்களைச் சரியாக உள்ளிட்டு வாங்க வேண்டும். இந்த விதிமுறைகளைச் சரிபார்த்து, உங்கள் ஃபாஸ்டேக் மற்றும் வாகனம் தகுதியுடையதாக இருப்பின், ஆகஸ்ட் 15, 2025 முதல் ராஜமார்க் யாத்ரா மொபைல் செயலி அல்லது NHAI மற்றும் MoRTH இன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் இந்த ஆண்டு பாஸை வாங்கலாம்.

ஃபாஸ்டேக் ஆன்லைனில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆகஸ்ட் 15, 2025 முதல் கிடைக்கும் ஃபாஸ்டேக் ஆண்டு பாஸை ஆன்லைனில் செயல்படுத்துவது மிகவும் எளிது. கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் ஆண்டு பாஸை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்:

முதலில், உங்கள் வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் செயலில் (active) உள்ளதா? வாகனத்தின் கண்ணாடி மீது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா? சரியான வாகனப் பதிவு எண்ணுடன் (VRN) இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த 3 நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஆண்டு பாஸை ஆக்டிவேட் செய்ய முடியாது. ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலியை (Rajmarg Yatra mobile app) அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். 3-ம் தரப்பு தளங்களைத் தவிர்ப்பது முக்கியம். தேர்ந்தெடுத்த தளத்தில், உங்கள் வாகனப் பதிவு எண் (Registration Number) மற்றும் ஃபாஸ்டேக் ஐடி (FASTag ID) போன்ற தேவையான வாகன விவரங்களை உள்ளிடவும்.

ஆண்டு பாஸிற்கான ₹3,000 கட்டணத்தைச் செலுத்த, கொடுக்கப்பட்டுள்ள கட்டண விருப்பங்களில் ஒன்றைத் (எ.கா: டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், UPI) தேர்வு செய்து ஒருமுறை மட்டுமே செலுத்தவும். பணம் செலுத்தும் பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தவுடன், உங்கள் ஆண்டு பாஸ் உடனடியாகச் செயல்படுத்தப்படும் (activated). ஆண்டு பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் உறுதிப்படுத்தலை, உங்கள் ஃபாஸ்டேக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குப் பெறுவீர்கள். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ₹3,000 ஃபாஸ்டேக் ஆண்டு பாஸை எளிதாகச் செயல்படுத்தி, 200 பயணங்கள் அல்லது ஒரு வருடம் (எது முதலில் வருகிறதோ அதுவரை) NHAI சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

Fastag Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: