/tamil-ie/media/media_files/uploads/2018/06/2-11.jpg)
Fathers Day 2018
Father’s Day 2018 :நாடு முழுவதும் தந்தையர் தினம் இன்று (17.6.18) கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையர்களை கெளரவிக்கும் தினமாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாளில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் கூகுள் டூடுள் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மாவின் பாசம் பேச்சில் தெரியும். அப்பாவின் பாசம் கண்ணில் பார்த்தால் மட்டும் தான் தெரியும் என்பார்கள்.குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.வருடந்தோறும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் தமது முகப்பு பக்கத்தில் வித்யாசமான புகைப்படத்தை தோன்ற வைத்து பலரின் கவனத்தையும் பெறும்.
அதே போல் இந்த வருடம் 6 கைகள் என்ற அடிப்படையில் வித்யாசமான புகைப்படத்தை கூகுளின் முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது. 6 கைகள் என்பது குடும்பத்தில் இருக்கும் 6 உறுப்பினர்கள். முதலில் இருக்கும் கை அப்பாவை குறிக்கிறது. அதன் பின்பு மனைவி, பிள்ளைகளை குறிக்கிறது. தந்தையானவர் குடும்பத்தை ஒருங்கிணைப்பவராகவும், குடும்பத்தை வழிநடத்தி ஒற்றுமையின் ஆணி வேராக இருப்பதை உணர்த்தும் விதமாக புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையை கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி இன்று கொண்டாடப்படுவது 109 ஆவது ஆண்டு தந்தையர் தினம் ஆகும். தந்தையர்களுக்கு அர்ப்பணிக்கும் இந்த நாளில், அவர்களை கெளரவிக்கும் விதமாகும், அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு தந்தையர் தினம் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.