ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகும். நாடு முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். ஜியோ அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது வழக்கம்.
பொதுவாக அனைத்து நிறுவனங்களும் இதுபோன்று விளம்பரம் செய்வர். குறிப்பாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் அதிக விளம்பரம் இடம்பெறும். இதில் சில மோசடி விளம்பரங்களும் இடம்பெற்று மக்களை ஏமாற்றி மோசடிகள் அரங்கேறுவதும் உண்டு.
அந்த வகையில், ஜியோ ரீசார்ஜ் பற்றி விளம்பரம் இப்போது வைரலாகி வருகிறது. அதில், அம்பானி போட்டோ உடன் 365 நாட்கள் ரீசார்ஜ் திட்டம் ரூ.399 மட்டுமே என்று போட்டு ஒரு லிங்க் உள்ளது.
அந்த லிங்க் கிளிக் செய்தால், மை ஜியோ ஆப் போன்று டிசைன் செய்யப்பட்ட ஆப் வருகிறது. அதில் ஏர்டெல், வி.ஐ ரீசார்ஜ் திட்டங்களும் உள்ளன என்பதில் தெரிகிறது இது மோசடி என்று. மேலும் மொபைல் எண் என்ற இடத்தில் 10 இலக்க நம்பருக்கு பதில் 123 என்று கொடுத்தால் கூட அதை செக் செய்யாமல், நேரடியாக பேமெண்ட் தளத்திற்கு செல்கிறது.
இப்போது இங்கு மிகவும் உஷாராகி விட வேண்டும். இது மோசடி என்று தெரிந்து விட்டது. பேமெண்ட் தளத்தில் உங்கள் வங்கி கணக்கு விவரம், யு.பி.ஐ கொடுத்தால் உடனே பணம் பறிபோகும். எனவே எப்போதும் ஒரு அதிகாரப்பூர்வ செயலி, வைப்சைட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.