கூகுள் நிறுவனத்தின் ’புரோ கல்சர்’ பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுக்குகிறது: முன்னாள் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தன்னுடன் வேலை செய்த சக பணியாளர்கள் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் புரோ கல்சர் பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுப்பதாக அந்நிறுவனத்தில் பணிப்புரிந்த முன்னாள் பெண் பொறியாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம், கூகுளின் மூல நிறுவனமான (Alphabet) ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிந்த ஜேம்ஸ் டாமோர் என்பவர், கூகுள் நிறுவனத்தில் ஆண் – பெண் பாகுபாடு பெருமளவில் பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமைப் பொறுப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறி அவர் தனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்த அறிக்கை பெருய்ம் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.

அதன் பின்பு, ஜேம்ஸ் டாமோர் வேலையில் இருந்து அதிகரடியாக நீக்கப்பட்டார். பாலின வேறுபாட்டைப் பற்றியும் வரம்பு மீறி எழுதியிருந்ததால் ஜேம்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பெண் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கூகுளின் ’புரோ கல்சர்’ பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுப்பதாக, அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த பெண் பொறியாளர் சரியாக வேலை செய்தாக காரணத்தினால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடன் வேலை செய்த சக பணியாளர்கள் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாக  கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Female software engineer at google sues the tech giant for creating bro culture that led to her being slapped groped and sexually harassed at work

Next Story
ட்விட்டரின் புதிய அப்டேட்: டைரக்ட் மெசேஜ் அனுப்புதல்Twitter, Micro blogging, Social media,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com