Amitabh Sinha
Final five minutes of Chandrayaan-2
மேலும் படிக்க : சந்திரயான்-2 பயணத்திற்கு உறுதுணையாக நின்ற ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் தான்
லேண்டர் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகத்தில் தரையிறங்க துவங்கியது. லேண்டரின் திசை வேகம் அல்லது டெக்லெரேசன் நினைத்தை விஅ குறைவாக இருந்தது. மறைந்து போன பச்சை புள்ளிகள் மீண்டும் தெரிய துவங்கின. நினைத்த இலக்கினை அடைவதற்கு சரியான பாதையில் அது பயணித்துக் கொண்டிருந்ததை அனைவராலும் காண இயன்றது. வெறும் 15 நொடிகளுக்கு மட்டுமே அந்த பச்சைப் புள்ளிகள் தோன்றி மறைய, தோல்வியின் சோகம் இஸ்ரோவின் அனைத்து மூலைகளிலும் பரவத் துவங்கியது.
பின்பு, லேண்டரில் இருந்து சிக்னல்கள் கிடைப்பது முற்றிலும் ரத்தானது என ஆராய்ச்சியாளர்கள் உணரத் துவங்கினர். கட்டுப்பாட்டு அறையில் நிகழும் எந்த விசயமும் வெளி உலகிற்கு தெரியவில்லை. நிலவில் தரையிறங்க ஆயத்தமான 17வது நிமிடத்தில் சிக்னல் இழப்பு ஏற்பட்டது. ஒரு நிமிடம் 30 நொடிகளுக்கு மேலாக அங்கிருந்து சிக்னல் ஏதும் கிடைக்காத நிலையில் சிவன் எழுந்து சென்று ஏ.எஸ்.கிரன் குமாருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இஸ்ரோவில் நிகழ்ந்தது என்ன?
விசிட்டர்கள் வளாகத்தில் அமர்ந்திருந்த நரேந்திர மோடியிடம் ஆராய்ச்சியாளர்கள் பி.என்.சுரேஷ் மற்றும் பி.எஸ். கோயல் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். உள்ளே இருக்கும் பதட்டம் அவர்களிடமும் தொற்றிக் கொண்டது. சிவன் மற்றும் கிரண் குமார் உள்ளே இருக்கும் இதர ஆராய்ச்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். நிலவின் தரைக்கு மேலே 2 கி.மீ இருக்கும் போது லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
அப்போது லேண்டர் நொடிக்கு 60 மீட்டர் வேகத்திலும், கீழ் நோக்கி நொடிக்கு 48 மீட்டர் வேகத்திலும் நிலவை நோக்கி பயணிக்க துவங்கியது. சில நொடிகளுக்கு அதன் வேகத்தை குறைக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அது நிலவில் தரையிறங்கியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் லேண்டரிடம் இருந்து வேறு எப்படியும் சிக்னல்களை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதில் இணைக்கப்படவில்லை என்பது தான் வருத்ததிற்குரியது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இதில் நல்ல விசயம் என்னவென்றால், மிக வேகமாக தரையிறங்கிய சந்திரயான் 2 நிலவில் தடம் பதித்தது. அந்த வேகத்தில் சென்றதன் விளைவாகவே அதன் தொலைத் தொடர்பு ரத்தானது. மேலும் சில முறைகள் சிக்னல்களை திரும்பப் பெறும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பலன் ஏதும் இல்லாத காரணத்தால் 5 நிமிடங்கள் கழித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. சிவன் முதலில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதனை அறிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1906.jpg)
சிவனிடம் ஆறுதலாக பேசிவிட்டு தன்னுடைய ஹோட்டலுக்கு சென்றார் பிரதமர். பிறகு காலை 8 மணிக்கு ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசுவதாக கூறினார். பிரதமர் சென்ற 10 நிமிடங்கள் கழித்து “நிலவின் மேற்பரப்பில் 2.1 கி.மீ தொலைவில் லேண்டர் விக்ரமிடமிருந்து சிக்னல்கள் பெறுவது தடை பெற்றது. டேட்டா விரைவில் ஆராயப்படும்” என்று தன்னுடைய உடைந்து போன குரலில் கூறினார் சிவன்.