கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை ஆப் (Find My Device) செயலி, ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது, இது ஒவ்வொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனருக்கும் அவசியமான செயலியாகும். Google-ன் Find My Device செயலியை பயன்படுத்தி உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை கண்டுபிடிக்கலாம்.
ஐபோனைப் போலல்லாமல், ஃபைண்ட் மை ஆப் செயலியை பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும்.
ஆண்ட்ராய்டு சாதனங்கள்
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்/டேப்லெட்களை வைத்திருந்தால், உங்கள் சாதனங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதை இந்த ஆப் எளிதாக்குகிறது. உங்கள் வீட்டிற்குள்ளே இருந்தாலும் கண்டுபிடிக்கலாம். லாக் செய்யலாம்.
கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி ட்ராக் செய்யலாம். எனினும் எல்லா சாதனங்களும் ஒரே கூகுள் அக்கவுண்ட்டில் லாக்கின் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகள் மட்டுமல்ல, இது கூகுளின் WearOS இல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களிலும் பயன்படுத்தலாம்.
உங்களிடம் மாற்று போன் அல்லது எக்ஸ்ரா போன் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் ஃபோனில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக்கின் செய்து பயன்படுத்தலாம். அல்லது லேப்டாப்பில் google.com/android/find/ என்ற இணையத்திலும் பயன்படுத்தலாம்.
இன்டர்நெட் தேவை
முக்கிய விஷயமாக இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் தொலைந்து போன போனில் இன்டர்நெட் தேவை. இன்டர்நெட் ஆனில் இருக் க வேண்டும். அது மொபைல் நெட்வொர்க் அல்லது வைஃபை நெட்வொர்க்காக இருக்கலாம். உங்களிடம் eSIM இருந்தால், அதைப் பயன்படுத்தி போன் ஸ்விட்ச் ஆப் ஆகும் வரை கனெக்ட் செய்ய வேண்டும்.
சாதனத்திடம் செல்ல navigate செய்ய “get directions” பட்டன் கொடுக்க வேண்டும். இது சாதனத்தின் கடைசியாக அறியப்பட்ட இருப்பிடத்துடன் Google மேப்ஸ் அணுகும். இந்த செயலியில் சாதனத்தின் IMEI எண்ணும் உள்ளது, இது தொலைந்து போன ஸ்மார்ட்போன் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உதவுகிறது, duplicate சிம் கார்டைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/techook/how-to-track-and-find-your-lost-android-smartphone-9080874/
இறுதியாக, இந்த ஆப் சாதனத்தை factory reset செய்யவும் அனுமதிக்கிறது. இது உங்கள் எல்லா தனிப்பட்ட பைல்களை வேறு யாராலும் அணுக முடியாது என்பதை உறுதி செய்யும். இது மிக முக்கிய அம்சமாகும். இருப்பினும் இதை நீங்கள் செய்தால் அதன் பின் உங்கள் போனை Find My Device ஆப் மூலம் லோக்கேஷன் ட்ராக் செய்ய முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“