/tamil-ie/media/media_files/uploads/2023/01/fire-boltt-ultra-talk.jpg)
Fire Boltt நிறுவனம் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆப்பிள்வாட்ச்களுக்கு இணையாக ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ப்ளூடூத் காலிங் வசதி, ஃபிட்னஸ் அம்சங்கள், ஸ்போட்ஸ் மோடு, ஆக்சிஜன், இதய துடிப்பு கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.
அந்த வகையில், ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா 1.39-இன்ச் சர்க்குளார் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கருப்பு, நீலம், சிவப்பு, கிரே, பிங்க் உள்ளிட்ட நிறங்களில் வாட்ச் கிடைக்கிறது. ரன்னிங், சைக்கிள், ஜாக்கிங் மற்றும்
பலவற்றை உள்ளடக்கிய 123 விளையாட்டு முறைகளை (sports modes) ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.
அதோடு, step counter, exercise duration timer, distance calculator மற்றும் இதய துடிப்பு மானிட்டர் போன்ற தொழில்நுட்பங்களையும் வழங்குகிறது.
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ராவில் என்ன சென்சார்கள் உள்ளன?
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா வாட்ச்சில் accelerometer, barometer, gyro sensor, and light sensor பொருத்தப்பட்டுள்ளது. ரியல் டைம் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பதற்கான SpO2 சென்சார் உள்ளது. water and dust resistance-க்கான IP68 ரேட்டிங் கொண்டுள்ளது.
ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் சார்ஜிங்
ஃபயர் போல்ட் அல்ட்ரா ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இணைத்து பயன்படுத்தலாம். சிரி மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆகியவற்றையும் இதில் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்வாட்ச்சை ஒரு முறை சார்ஜ் செய்தால், 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
எங்கு கிடைக்கும், விலை என்ன?
ஃபயர் போல்ட் அல்ட்ரா பிளிப்கார்ட் இணையதளம் மற்றும் Fire Boltt இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ரூ.1,999க்கு வாங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.