மொபைல் பிரியர்களின் கவனத்திற்கு.... நோக்கியா 7 ப்ளஸ் விரைவில் அறிமுகம்!

எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகமாகின்றன

பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் நோக்கியா 7 ப்ளஸ் மாடலின் முழு விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பார்சிலலோனாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகும் எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகமாகின்றன. அந்த வகையில், மொபைல் பிரியர்களின் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 7 ப்ளஸ் மாடல் பல சிறப்பமசங்களை கொண்டு வெளியாகிறது.

இந்திய சந்தையில், நாளுக்குநாள் பல தரப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் வந்து செல்கின்றன. இந்த போட்டியில், வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் மொபைல்கள், சந்தையில் எப்போதுமே முந்திச் செல்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்ஃபோன்கள் உலகில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் நோக்கியா நிறுவனம், தனது அடுத்த மாடலான நோக்கியா 7 ப்ளஸ்  குறித்த எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படுத்தி வந்தது.

பின்பு, இறுதியாக பிப்ரவரி மாதம் பார்சிலலோனாவில் நடைபெறும் எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் இந்த மாடல் அறிமுகமாகும் என்று அறிவித்தது. இந்த நிகழ்ச்சி துவங்க சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்று இந்த ஸ்மாட்ர்ஃபோனில் இடம்பெற்றிருக்கும் சிறப்பமசங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

நோக்கியா 7 ப்ளஸ் மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பமசங்கள்:

>18:9 திரைவிகிதம்

> 6இன்ச் எச்டி ட்ஸ்பிளே

> 1080 பிக்சல்

>2.5டி க்ளேஸ் புரோடக்‌ஷன்

>4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஸ்டோரெஜ்

>2எம்பி மற்றும் 13எம்பி இரட்டை கேமரா வசதி

>டெலிஃபோட்டோ லென்ஸ்

> 16எம்பி செல்பீ கேமரா

>3300எம்ஏஎச் பேட்டரி

×Close
×Close