All these tech gadgets are priced under Rs 500 (Express Photo)
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் பல தொழில்நுட்ப பொருட்களை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க கூடிய குறைந்த விலை மற்றும் தினமும் பயன்படுத்த கூடிய அத்தியாவசிய தொழில்நுட்ப கேஜெட்டுகள் குறித்து இங்கு பார்ப்போம். ரூ. 500க்கும் குறைவான விலையில் கிடைக்க கூடிய பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
மல்டி ஃபங்க்ஷன் கீ செயின்
அமேசானில் ரூ.200க்கும் குறைவான விலையில் மல்டி ஃபங்க்ஷன் கீ செயின் லைட் கிடைக்கிறது. இந்த குறைந்த விலை கேஜெட், USB Type-C சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். LED ஒளி தரும். இதில் காந்தம் உள்ளது. கதவுகள் மற்றும் கைப்பிடிகளில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.
வயர்லெஸ் ப்ளூடூத் 4.0 ஆண்டி-லாஸ்ட் ஆன்டி-தெஃப்ட் அலாரம் கருவி
Advertisment
Advertisements
இது ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மற்றொரு உபயோக பொருளாகும். QOCXRRIN Wireless Bluetooth 4.0 Anti-Lost Anti-Theft Alarm Device, பெயர் குறிப்பிடுவது போல ப்ளூடூத் டிராக்கர் ஆகும். இது இரண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடனும் பயன்படுத்தப்படலாம், இது ஒரு கீசெயினுடன் எளிதாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதாக மாற்றக்கூடிய பேட்டரியுடன் வருகிறது. 25 மீட்டர் வரை டிராக் செய்து கண்டறிய முடியும்.
பவர் பேங்குடன் கூடிய Hkaudio M28 TWS இன்-இயர் இயர்பட்ஸ்
இந்த கருவி மட்டும் 500 ரூபாய்க்கு சற்று அதிகம். வர் பேங்குடன் கூடிய Hkaudio M28 TWS இன்-இயர் இயர்பட்ஸ் ஒரு வயர்லெஸ் இயர்போன் ஆகும், இது ஒரு பவர் பேங்காகவும் செயல்படுகிறது. USB Type-A மற்றும் Type-A போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. மற்ற சாதனங்களையும் இதில் சார்ஜ் செய்யலாம். ப்ளூடூத் 5.1 இணைப்புடன் வருகிறது. மேலும் இது கேமிங் பயன்முறையை ஆதரிக்கிறது, இது மலிவான மற்றும் நடைமுறை வயர்லெஸ் இயர்போன் ஆகும்.
VIHM 7 இன் 1 எலக்ட்ரானிக் கிளீனர் கிட்
வெறும் ரூ.399 விலையில், VIHM 7 இன் 1 எலக்ட்ரானிக் கிளீனர் கிட்டை நீங்கள் பெறலாம். மானிட்டர்கள், கீபோர்டுகள், ஃபோன்கள், ஏர்போட்கள் மற்றும் லேப்டாப்களை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறைந்த விலை ஆல் இன் ஒன் கிளீனிங் கிட் ஆகும். அமேசானில் இதை நீங்கள் பெறலாம்.
வீகூல் நைலான் 3 இன் 1 சார்ஜிங் கேபிள்
Wecool Nylon Braided 3 in 1 சார்ஜிங் கேபிளின் விலை ரூ. 333 ஆகும். இது யுனிவர்சல் சார்ஜிங் கேபிள் ஆகும். ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்கள் சார்ஜ் செய்யலாம். USB போர்ட் உள்ளது. சார்ஜ் செய்யக்கூடிய மைக்ரோ USB போர்ட்டையும் கொண்டுள்ளது. 3 கேபிள்களுடன் வருவதால் இது நீண்ட நாட்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“