Advertisment

அடுத்த 10 நாட்களில்.. பூமியை நோக்கி வரும் 5 சிறுகோள்கள்; நாசா சொன்ன முக்கிய தகவல்

50 முதல் 240 அடி வரை விட்டம் கொண்ட சிறுகோள்களின் பாதைகள் நாசா விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
astero

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரியில் (ஜேபிஎல்) உள்ள டாஷ்போர்டின் படி, ஜூலை 8 முதல் ஜூலை 16 வரை ஐந்து சிறுகோள்கள் நமது பூமியைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் செல்லும் என்று கூறியுள்ளனர்.

Advertisment

50 முதல் 240 அடி வரை விட்டம் கொண்ட சிறுகோள்களின் பாதைகள் நாசா விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

ஜூலை 8 ஆம் தேதி முதல் சிறுகோள் 2024 MT1 936,000 மைல் தொலைவில் கடந்து செல்லும், அதைத் தொடர்ந்து 2024 ME1 பூமியிலிருந்து 2,700,000 மைல் தொலைவில் ஜூலை 10 அன்று கடந்து செல்லும், 2022 YS5 என்று பெயர் உள்ள சிறுகோள்  ஜூலை 11-ம் தேதி பூமியில் இருந்து 2,620,000 மைல் தொலைவில் நெருங்கி வந்து கடந்து செல்லும் எனக் கூறியுள்ளனர்.

ஜூலை 13, 2024 அன்று NG  சிறுகோள் 22,140,000 மைல்களைக் கடந்து செல்லும், கடைசியாக,  ஜூலை 16 அன்று 2024 BY15 என்ற சிறுகோள் பூமியில் இருந்து 3,850,000 மைல்களுக்குள் கடந்து செல்லும் என்று நாசா கூறியுள்ளது.

இதற்கிடையில், நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கின் கோல்ட்ஸ்டோன் கிரக ரேடார், 2024 MK மற்றும் 2011 UL21 ஆகிய இரண்டு சிறுகோள்களை பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றதை சமீபத்தில் கவனித்தது. எனினும் இந்த சிறுகோள்கள்  பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தாது என்றும் பூமியில் இருந்து  பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment