ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் பணப் பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. போனில் விதமான ஷாப்பிங் செய்யலாம், ஆன்லைனிலேயே பில் கட்டணம் செலுத்தலாம், கேம் விளையாடலாம். பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் கேம் அதிகம் விளையாடுவார்கள். பொதுவாகவே அவர்களுக்கு அதில் அதிக ஆர்வம் உள்ளது. அந்த வகையில்
ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இளைஞர்களை கவரும் வகையில் கேமிங் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமான அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கேமிங் ஸ்மார்ட்போன்கள் என முழுக்க முழுக்க மேமிங்கிற்காக பிரத்யேகமாக தயாரித்து உள்ளது. ஆசஸ் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் இந்த போன்களை தயாரித்து உள்ளன. ஃபாஸ்ட் பிராஸசர் கொண்ட வசதிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். கேமிங் போன்கள் அல்லாத மற்ற ஸ்மார்ட்போன்களிலும் சிறந்த கேமிங் வசதிகள் உள்ளன. அந்த வகையில் 30,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கேமிங்கை மையப்படுத்திய திறன்களைக் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
Google Pixel 6a - ரூ. 29,999
கூகிள் பிக்ஸல் 6a டென்சர் பிராஸசரரை அடிப்படையாகக் கொண்டது. இது விலையுயர்ந்த பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவை இயக்குகிறது. ரீஃப்ரெஸ் ரேட் டிஸ்ப்ளே இல்லை என்றாலும், அது இன்னும் சிறந்த 60Hz OLED பேனலைக் கொண்டுள்ளது. டென்சர் பிராஸசர் அதிக தரத்துடன் இயங்கும் PUBG, New State, COD போன்ற விளையாட்டுகளை எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆதரிக்கிறது. மேலும் இந்த போன் நேரடியாக கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். சமீபத்திய ஆண்ட்ராய்டு OS ஆதரவை பெறுகிறது.
OnePlus 10R
ஒன்பிளஸ் 10ஆர் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. கேமிங் போன் விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இது Dimensity 8100 SoC மூலம் இயக்கப்படுகிறது. மிட் ரேஞ்சு பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது OxygenOS 13 OS உடன் கேமிங்கை மையப்படுத்திய இப்கிரோடுகளை கொண்டுள்ளது.
ரெட்மி K50i - ரூ.20,999
Redmi K50i இந்த பட்டியலில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆகும். OnePlus 10R போலவே Mediatek Dimensity 8100 SoC ஐ அடிப்படையாகக் கொண்டது. Redmi K50i 144Hz ஐபிஎஸ் எல்சிடி பேனல் கொண்டது. இது ப்ரேம் ரேட்டை அதிகரித்து மென்மையான கேமிங் அனுபவத்தை செயல்படுத்துகிறது. மேலும், தனித்துவமான MIUI ஸ்கின் சில மென்பொருன் வசதிகளை கொண்டுள்ளது. இதுவும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
போகோ Poco F4 5G
Poco F4 5G ஸ்மார்ட்போன் ரூ. 25,999 விலையில் கேமிங்கை மையமாகக் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 870 SoC ஐ அடிப்படையாகக் கொண்டது. UFS 3.1 ஸ்ரோரேஜ் வசதியுடன் 128GB கொண்டது. அதிக ஸ்ரோரேஜ் வசதி நிறைய கேம்களை டவுன்லோடு செய்ய உதவுகிறது. Poco F4 5G ஆனது 120Hz ரீபிரெஸ் ரேட் மற்றும் FHD+ resolution கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.