/tamil-ie/media/media_files/uploads/2017/08/flipcart.jpg)
Flipkart Big Billion Days Sale: பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் இந்தாண்டிற்கான தள்ளுபடி விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பல்வேறு சலுகைகளுடன் இந்த விற்பனை செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்.29ம் தேதி விற்பனை தொடங்குகிறது. ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட பெருட்களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் குறிப்பாக ஆப்பிள் ஐபேட் 9th Gen ரூ.20,000-க்கும் குறைவான விலையில் ரூ.18,999க்கு விற்பனைக்கு வர உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
iPad 9th Gen 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் A13 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 9th Gen ஆனது IPS தொழில்நுட்பத்துடன் கூடிய 10.2-இன்ச் LED பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதோடு சமீபத்திய அப்டேட் iPadOS 18-ம் பெறுகிறது பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.