பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது ஆண்டு தள்ளுபடி விற்பனையான பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதியும், மற்ற அனைவருக்கும் செப்டம்பர் 27ம் தேதியும் விற்பனையை தொடங்க உள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட் போன்ரூ.31,999 விற்பைனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் இந்தியாவில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டேரேஜ் உடன் கூடிய போன் ரூ.75,999க்கு அறிமுகமானது.
இப்போது தள்ளுபடி விற்பனையில் ரூ.40,000 குறைந்து ரூ.30,000க்கும் கீழ் பெற முடியும்.
சிறப்பம்சங்கள்
இந்த போன் க்ளாஸ் மற்றும் அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.2-இன்ச் ஆக்டுவா டிஸ்ப்ளே உள்ளது. ஃபோன் 2,000 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பை வழங்குகிறது.
கூகுள் பிக்சல் 8 அதன் சாப்ட்வேர் திறனுக்கு பெயர் பெற்றது. 3 கேமரா அமைப்பை கொண்டுள்ள இந்த போன் 50 மெகாபிக்சல் ஆக்டா-பிடி பிரதான கேமரா, 8x சூப்பர்-ரெஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ திறன்களுடன் 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 10.5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, Pixel 8 ஆனது 4,575 mAh பேட்டரி உடன் 27W வேகமான வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதோடு18W வயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“